இராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ராமலட்சுமி என்ற 16 வயது பெண் யானை உள்ளது. தொழிலதிபர் ராமசுப்ரமணிய ராஜாவால், ராமலட்சுமி யானை ராமேஸ்வரம் கோயிலுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. 7 வயது குட்டியில் ராமேஸ்வரம் கோயிலுக்கு வழங்கப்பட்ட ராமலட்சுமி ஏற்கெனவே கோயிலில் இருந்து வந்த பவானி என்ற யானையுடன் சேர்ந்து கோயில் திருவிழாக்கள் மற்றும் சுவாமி வீதி உலாக்களில் பங்கேற்று வந்தது.
இந் நிலையில், கடந்த 2013-ம் ஆண்டு யானைகள் புத்துணர்ச்சி முகாமுக்குச் சென்ற பவானி, ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தபோது உயிரிழந்தது. இதனால் ராமலட்சுமி மட்டும் தனித்து விடப்பட்ட நிலையில் 2014-ம் ஆண்டு புத்துணர்வு முகாமுக்குச் சென்று திரும்பியது. இதனிடையே ராமேஸ்வரம் கோயில் கும்பாபிஷேகம், மாசித் திருவிழா ஆகியவற்றால் அடுத்து வந்த 2 ஆண்டுகளாக ராமலட்சுமி புத்துணர்வு முகாமுக்குச் செல்லவில்லை. கடந்த ஆண்டு 2-ம் முறையாக முகாமுக்கு இரண்டாம் முறையாக ராம ல்ட்சுமி சென்று வந்தது,
இந்நிலையில், தேக்கம்பட்டி வன பத்ரகாளியம்மன் வனப்பகுதியில் இந்த ஆண்டுக்கான புத்துணர்வு முகாம் நாளை துவங்க உள்ளது. இந்த முகாமில் பங்கேற் ராமலட்சுமி யானை இராமேஸ்வரத்திலிருந்து லாரியில் புறப்பட்டுச் சென்றது. முன்னதாக ராமலட்சுமி புத்துணர்வு முகாமுக்குச் செல்வதை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வழியனுப்பி வைக்கப்பட்டது. பயணத்தின்போது ராமலட்சுமியின் உடல் நிலை குறித்து அவ்வப்போது ஆய்வு செய்ய ஏதுவாகக் கால்நடை மருத்துவர் குழுவும் உடன் செல்கிறது.கோயில் இணை ஆணையர் மங்கையர்க்கரசி, உதவி கோட்டப் பொறியாளர் மயில்வாகனன், பேஷ்கர்கள் கஹாரின், கமலநாதன், கண்ணன், செல்லம் மற்றும் திருக்கோயில் பணியாளர்களும், பக்தர்களும் பங்கேற்றனர்.
அதே போல் பழனியில் தண்டாயுதபானி சுவாமி கோயில் சார்பாக தேக்கம்பட்டி புத்துணர்வு முகாமிற்க்கு கஸ்தூரி யானை பயணம் சென்றது.
தேக்கம்பட்டி புத்துணர்வு முகாமிற்க்கு பழனி, தண்டாயுதபானி சுவாமி திருக்கோயில்களின் கஸ்தூரி யானை அழைத்துச் செல்லப்பட்டன. கோவை மாவட்டம் தேக்கம்பட்டியில் ஆண்டு தோறும் திருக்கோயில் யானைகள் மற்றும் தனியார் யானைகளுக்கு சிறப்பு புத்துணர்வு முகாம் தமிழக அரசின் இந்துசமய அறநிலையத்துறை மற்றும் வனத்துறை சார்பில் நடத்தப்படுகிறது. நடப்பு ஆண்டுக்கான முகாம் வெள்ளி கிழமை தொடங்கி 48 நாள்கள் நடைபெறவுள்ளது. இம்முகாமில் பங்கேற்பதற்காக பழனி தண்டாயுதபானி சுவாமி திருக்கோயில் யானை கஸ்தூரி வியாழக் கிழமை காலை சிறப்புப் பூஜைக்குப் பிறகு லாரியில் ஏற்றப்பட்டது. யானைக்கு கோயில் சார்பில் ஆரத்தி எடுத்து வழியனுப்பி வைத்தனர். யானைகள் பத்திரமாக வியாழன் மாலை முகாம் இடத்தை அடையும் என்று திருக்கோயில் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
பழனி யானை:
பழனி: பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் யானை கஸ்தூரியை முகாமுக்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி கோயிலுக்கு சொந்தமான காரமடைத் தோட்டத்தில் நடைபெற்றது. அப்போது யானைக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி தீபாராதனை காட்டப்பட்டு பழங்கள் வழங்கப்பட்டன. முகாமுக்கு செல்லும்போது யானையின் எடை4790 ஆகும்.கஸ்தூரி யானையின் வயது 53 ஆகும்.தண்டபானி சுவாமி கோயில் ஆணையர் செல்வராஜ் தலைமையில் உதவி ஆணையர் செந்தில்குமார், மருத்துவர்கள் முருகன் ரவிச்சந்திரன்,மற்றும் பழனி வனச்சரக பணியாளர்கள்,கோயில் அதிகாரிகளான முருகேசன்,காளியப்பன்,மற்றும் கோயில் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.மேலும் யானைக்கு கஜபூஜை நடத்தப்பட்டது. பின்னர், மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து பொங்கல், பழங்கள் உள்ளிட்டவை யானைக்கு கொடுக்கப்பட்டனர். இறுதியாக கோயில் ஆணையர் செல்வராஜ் கொடியசைத்து வைத்து அனுப்பி வைத்தார்…
மாவட்ட செய்தியாளர்:- பக்ருதீன் மற்றும் முருகன்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









