கோவை வனக்கோட்டம் மேட்டுப் பாளையம் வனசரகத்தில் 13 முதல் 15 வயது மதிக்கத்தக்க ஜித்து என்னும் பேர் கொண்ட ஆண் காட்டு யானை உயிரிழந்த நிலையில், வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தலின் படி யானை இறந்த பகுதிக்கு விலங்குகள் உடற் கூறாய்வு மருத்துவ குழு வந்தடைந்தது. தற்போது பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

