தேர்தல் பத்திரங்கள் மூலம் மாநிலக் கட்சிகள் திரட்டிய நிதிகள் இவ்வளவா.!!
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதற்காக விற்பனை செய்யப்பட்ட தேர்தல் பத்திரங்கள் மற்றும் அந்த பத்திரங்களை பணமாக மாற்றிய கட்சிகள் தொடர்பான விவரங்களை பாரத ஸ்டேட் வங்கி ஒப்படைத்தது. இந்த விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
இந்த புள்ளிவிவரத்தின்படி, 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரையிலான காலகட்டத்தில் அதிகபட்சமாக தேசிய கட்சியான பா.ஜ.க. ரூ.6,060.51 கோடி நிதி திரட்டியிருப்பது தெரியவந்துள்ளது. தேசிய கட்சிகளில் காங்கிரஸ் கட்சி ரூ.1,421.86 கோடி நிதியுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. ஆம் ஆத்மி கட்சி ரூ.65.45 கோடி நிதி பெற்று மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. பிற தேசிய கட்சிகளான பகுஜன் சமாஜ் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் என்.பி.பி. ஆகிய கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் எந்த நிதியும் பெறவில்லை.
இதேபோல், தேர்தல் பத்திரங்கள் மூலம் பிராந்திய கட்சிகள் மொத்தம் ரூ.5,221 கோடி நிதி பெற்றுள்ளன. இது பா.ஜ.க. திரட்டிய நிதியைவிட ரூ.839 கோடி குறைவு ஆகும். நிதி திரட்டிய பிராந்திய கட்சிகளில் திரிணாமுல் காங்கிரஸ் முதலிடத்தை பிடித்துள்ளது. தமிழகத்தை ஆளும் தி.மு.க. 4-வது இடத்தில் உள்ளது.
பிராந்திய கட்சிகள் பெற்ற நிதி விவரம் வருமாறு:-
திரிணாமுல் காங்கிரஸ் – ரூ.1,609.53 கோடி.
பாரத் ராஷ்டிர சமிதி – ரூ.1,214.70 கோடி
பிஜு ஜனதா தளம் – ரூ.775.50 கோடி
தி.மு.க. – ரூ.639 கோடி
ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் – ரூ.337 கோடி
தெலுங்கு தேசம் கட்சி – ரூ.218.88 கோடி.
சிவ சேனா – ரூ.159.38 கோடி.
ராஷ்டிரிய ஜனதா தளம் – ரூ.73.5 கோடி.
மதச்சார்பற்ற ஜனதா தளம் – ரூ.43.40 கோடி.
சிக்கிம் கிரந்திகாரி கட்சி – ரூ.36.5 கோடி.
தேசியவாத காங்கிரஸ் – ரூ.31 கோடி.
ஜன சேனா கட்சி – ரூ.21 கோடி.
சமாஜ்வாடி கட்சி – ரூ.14.05 கோடி.
ஐக்கிய ஜனதா தளம் – ரூ.14 கோடி.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா – ரூ.13.5
அகாலி தளம் – ரூ.7.2 கோடி.
அ.தி.மு.க. – ரூ.6.05 கோடி.
சிக்கிம் ஜனநாயக முன்னணி – ரூ.5.5 கோடி.
மகாராஷ்டிரவாடி கோமந்தக் கட்சி, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி, கோவா பார்வர்டு கட்சி ஆகிய கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் ஒரு கோடிக்கும் குறைவான நிதியை பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









