லோக்சபா பொதுத் தேர்தலைதையொட்டி இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் ஒரு தொகுதிக்கு மூன்று வீதம் 12 பறக்கும் படை, 12 நிலைத்த கண்காணிப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் துணை வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி நிலை அலுவலர் தலைமையில் ஒரு காவல் சார்பு ஆய்வாளர், 3 போவீசார், ஒரு வீடியோ பதிவாளர் என 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இக்குழு அலுவலர்கள் அந்தந்த பகுதிகளை தேர்தல் நன்னடத்தை விதிமீறல்கள் தொடர்பாக கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் தொடர்பான புகார்கள், குறைகள் தெரிவிக்க விளக்கங்கள் பெற மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 1950 என்ற கட்டணமில்லா சேவை எண் கொண்ட தேர்தல் கட்டுப்பாட்டு மையம் தொடங்கப்பட்டு 24 மணி நேரம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேர்தல் கட்டுப்பாட்டு மையத்தில் பெறப்படும் புகார்கள் சம்பந்தப்பட்ட கண்காணிப்புக் குழு அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டு துரித நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் தொடர்பான புகார்களை மக்கள் புகைப்படம், வீடியோவுடன் எளிதில் தெரிவித்திடும் வகையில் c-VIGIL என்ற செல்பொன் செயலி அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்மார்ட்போன் வைத்திருப்போர் இச்செயலியை கூகுள் ப்ளே ஸ்டோர் தளம் அல்லது தேர்தல் ஆணைய இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.
இச்செயலி மூலம் பெறப்படும் புகார்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் சம்பந்தப்பட்ட நபருக்கு குறுஞ்செய்தியாக அனுப்பும் வகையில் இச் செயலி செயல்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் நன்னடத்தை விதிமீறல்கள் தொடர்பான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள பறக்கும்படை, நிலைத்த கண்காணிப்பு குழு அலுவலர்கள் பார்வையிட்டு கண்காணிப்பு பணியில் விழிப்புடன் பணியாற்ற வேண்டுமென அறிவுறுத்தினார். கண்காணிப்பு பணியின்போது உரிய ஆவணமின்றி பணம், பரிசுப் பொருட்கள் கைப்பற்றும் போது இந்திய தேர்தல் ஆணைய வழிகாட்டுதல்களை முறையே பின்பற்ற வேண்டும். இத்தகைய கண்காணிப்பு பணிகளால் மக்கள் பாதிக்கப்படாதவாறு பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தினார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் சுமன், வட்டார போக்குவரத்து அலுவலர் சிவக்குமார், ஊராட்சிகள் உதவி இயக்குநர் கேசவதாசன் உட்பட அரசு அலுவலர்கள், தேர்தல் கண்காணிப்புக் குழு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print













