அமமுக., வுக்கு தமிழக மாணவர் கூட்டமைப்பு ஆதரவு என அறிவிப்பு..

தமிழக மாணவர் கூட்டமைப்பு மாநிலச் செயலாளர் தர்மராஜ் தலைமையில் ஏராளமான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் ஆனந்தை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்வதாக கூறி இணைத்து கொண்டனர்.

மாநில செயலாளர் தர்மராஜ் கூறியதாவது: தமிழகத்தில் திமுக., அதிமுக இரண்டுமே வாரிசு அரசியல் செய்து கொண்டிருக்கின்றன. எங்களை போன்ற படித்த இளைஞர்களை கட்சியில் இணைத்து ஆளுமைத்திறனை வளர்த்துக் கொள்ள இந்த இரு கட்சிகளுமே விரும்பவில்லை. திமுக ஆட்சியில் இலங்கை இனப்படுகொலையை தமிழக இளைஞர்கள் யாரும் அவ்வளவு எளிதில் மறக்கவில்லை. இந்த மண்ணில் திமுக ஆட்சி என்று ஒழிகிறதோ அன்று தான் தமிழனுக்கு வெற்றி. தமிழகத்தில் நீட் தேர்வை அமல்படுத்தியதன் மூலம் உயிர் நீத்த அனிதா ஆன்மா பாஜக.,ஆட்சியை ஒரு போதும் மன்னிக்காது. தமிழகத்தை ஆளும் தற்போதைய அதிமுக., அரசு, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய 13 பேரை துப்பாக்கி குண்டுகளால் நிகழ்த்திய படுகொலையை தமிழினம் மன்னிக்காது. பச்சோந்தி தனமான இயக்கம் தான் திராவிடர் கழகம் . பாஜக வுடன் ஒரு போதும் கூ ட்டணி இல்லை என்ற துணிவு மிக்க ஒற்றை ஆளுமை தன்மை கொண்ட அமமுக., துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை ஆதரிக்கிறோம். இபிஎஸ்., ஓபிஎஸ்., மூலம் தமிழகத்திற்கு ஏழரை சனி பிடித்துள்ளது, என்றார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!