இராமநாதபுரம் நாடாளுமன்ற லோக்சபா தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சமூக ஆர்வலர் கே.பஞ்சாட்சரம் போட்டியிடுகிறார். சத்திரக்குடி, மென்னந்தி, காமன்கோட்டை, முத்துவயல், அரிய குடி பகுதி வாக்காளர்களிடம் தீவிர வாக்குகள் சேகரித்தார். இவருக்கு ஆதரவாக மகளிர் குழுக்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சத்திரக்குடி அண்ணா நகரில் வாக்கு சேகரிக்க சென்ற போது, அப்பகுதியில் தள்ளுவண்டியில தண்ணீர் பிடித்துச் சென்ற பெண்களிடம் பஞ்சாட்சரம் வாக்கு சேகரித்தார். அவர் பேசும் போது, முதுகுளத்தூர் தொகுதிக்குற்பட்ட கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு தினந்தோறும் 20 லிட்டர் சுத்தரிக்கப்பட்ட குடிநீர் இலவசமாக தற்போது வழங்கி வருகிறேன். என்னை வெற்றி பெறச் செய்தால் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதி முழுவதும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இலவசமாக வழங்குவேன் என்றார். மாவட்ட தலைவர் கோவிந்தன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் சென்றனர்.





You must be logged in to post a comment.