நிலக்கோட்டை தொகுதியில் பதட்டமான வாக்குச்சாவடிகள் குறித்து தேர்தல் மேற்பார்வையாளர் ஆய்வு ..

திண்டுக்கல்  நிலக்கோட்டை  சட்டமன்ற இடைத் தேர்தலை முன்னிட்டு நிலக்கோட்டை தொகுதி முழுக்க ஆங்காங்கே பறக்கும் படை அதிகாரிகளும் , கூர்ந்தாய்வு பிரிவு உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.                இந்நிலையில் நேற்று சட்டமன்ற இடைத்தேர்தல் தேர்தல் மேற்பார்வையாளர் போது ஜோசப் பவுலின்  கம்சன் தலைமையில் அதிகாரிகள் நிலக்கோட்டை தொகுதியில் உள்ள பதட்டமான வாக்குச்சாவடிகளை திடீரென ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வு நிலக்கோட்டை ஹெச் .என்.யூ .பி.ஆர். பெண்கள் மேல்நிலைப் பள்ளியும் , நிலக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி, வத்தலக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளி, நூத்துலபுறம், குளத்துப்பட்டி,  அணைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளில் உள்ள வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்து அங்கு உள்ள அடிப்படை வசதிகள் குறித்தும், மேலும்  நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் உள்ள  அதிகாரிகளிடம்  தேர்தல் பணியை பணி குறித்து கேட்டறிந்தார்.

அப்போது நிலக்கோட்டை தேர்தல் நடத்தும் அலுவலர் ஜீனத் பானு, நிலக்கோட்டை தாசில்தார் நவநீதகிருஷ்ணன், நிலக்கோட்டை தொகுதி தேர்தல் மேற்பார்வையாளரின் உதவியாளர் கேசவன், வருவாய் ஆய்வாளர் ராமசாமி, கிராம நிர்வாக அலுவலர் ரேவதி உள்பட பலர் இருந்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!