மதுரை வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதி இன்றி எலக்ட்ரானிக் மெஷின்கள்- மதுரையில் திமுக வேட்பாளர் சரவணன் பேட்டி. .

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிவுற்ற நிலையில் வாக்குப்பதிவு மின்னணு இயந்திரங்கள் மதுரை அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு காவல்துறையினர் அதிகமாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் திடீரென எந்த ஒரு அனுமதியும் இன்றி கம்ப்யூட்டர் மற்றும் ஜெராக்ஸ் மெஷின் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் பொருட்கள் முறையான ஆவணங்கள் இன்றி வாக்கு எண்ணிக்கை மையத்தில் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.

எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி முறையான ஆவணங்கள் இன்றி வேட்பாளர்களிடம் எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் ஜெராக்ஸ் மிஷின்கள் மற்றும் கம்ப்யூட்டர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இருக்கிறது எனவே எழுத்துப்பூர்வமான புகாரை நாங்கள் கொடுத்துள்ளோம்.

Bsnl,airtel கம்ப்யூட்டர் நெட்வொர்க் எல்லாம் கொண்டுசெல்ல காரணம் என்ன? வாக்கு எண்ணிக்கை மையத்தில் என்னென்ன இயந்திரங்கள் உபயோகிக்கப்படும் என்று வேட்பாளர்களிடம் ஒரு பட்டியல் கொடுப்பார்கள் தற்போது வரை அந்த பட்டியல் எங்களிடம் வந்து சேரவில்லை. இதற்கு எழுத்துப்பூர்வமாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் கொடுக்க உள்ளோம்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!