திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் மாலை 6 மணி நிலவரப்படி 65.78 சதவிதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் 18.04.19 இன்று காலை 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணியுடன் நிறைவுற்றது.
இன்று நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வயதானவர்கள், முதன்முறை வாக்களிப்போர், இன்று திருமணம் முடிந்தோர்,மாற்றுத்திறனாளிகள் என பல்வேறு தரப்பினரும் மிகவும் ஆர்வத்துடன் வாக்களித்தனர். திருநெல்வேலி தொகுதியில் இரவு 6 மணி நிலவரப்படி 65.78 சதவிதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை பெரிய அளவில் எந்த அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மிகவும் அமைதியான முறையில் நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. தமிழக நாடாளுமன்ற தேர்தலில் தொகுதி வாரியாக வாக்குப்பதிவு நிலவரம்.*
திருவள்ளூர் -70.36 % வட சென்னை-61.46 % தென் சென்னை-58.14 % மத்திய சென்னை-57.05 % ஸ்ரீபெரம்பத்தூர்-60.09 % காஞ்சிபுரம்-57.52 % அரக்கோணம் 72.86 % கிருஷ்ணகிரி -72.79 % தர்மபுரி -73.45 % திருவண்ணாமலை 69.3 % ஆரணி -75.08 % விழுப்புரம் -72.50 % கள்ளக்குறிச்சி -75.18% சேலம் – 72.73% நாமக்கல் -78% ஈரோடு -71.10% திருப்பூர் -63.88% நீலகிரி -69.74% கோயம்பத்தூர் – 63.81% பொள்ளாச்சி-69.72% திண்டுக்கல்-70.40% கரூர் -75.84% திருச்சி -71.12% பெரம்பலூர் -74.67% கடலூர் – 72.51% சிதம்பரம் -76.07% மயிலாடுதுறை -71.20% நாகப்பட்டினம் -75.52% தஞ்சாவூர் -70.53அதிகபட்சமாக நாமக்கல் தொகுதியில் 78% வாக்கும்,குறைந்த பட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 57.05% வாக்கும் பதிவாகியுள்ளது.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









