இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் அறந்தாங்கி, திருச்சுழி, பரமக்குடி , திருவாடானை, இராமநாதபுரம், முதுகுளத்தூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. தொகுதியில் 7,75,765 ஆண்கள், 7,82,063 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 82 பேர் என 15, 57,910 வாக்காளர்கள் உள்ளனர். 18 முதல் 19 வயது வரை முதன் முறை வாக்காளர்கள் 21,867 உள்ளனர். தொகுதியில் 1,916 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. 792 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு செயல்பாடுகளை நுண் பார்வையாளர்கள் இணைய வழி வெப் கேமரா மூலம் கண்காணித்தனர். மண்டல அலுவலர்கள், போலீசார், ஊர்க்காவல் படை வீரர்கள் என 16, 247 பேர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் வாக்களிக்க வசதியாக சக்கர நாற்காலி, சாய்தளம் உள்ளிட்ட அடிப்படைகள் செய்யப்பட்டிருந்தன. வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது. கல்லூரி மாணவ, மாணவியர் உள்ளிட்ட முதன் முறை வாக்காளர்கள் வாக்களிக்க அதிக ஆர்வம் காட்டினர்.
இராமநாதபுரம் பாரதி நகர், வாலாந்தரவை, அழகன்குளம், மேதலோடை உள்பட பல இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதடைந்திருந்தன. இதனால் இங்கு வாக்குப்பதிவு தொடங்க ஒரு மணி நேரம் வரை தாமதம் ஏற்பட்டது. ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், அவரது மனைவி ஹர் சந்திகாவுடன் வந்து வாக்களித்தார். இந்த வாக்குச்சாவடியில் வாக்காளர்களுக்கு எலுமிச்சை பழச்சாறு வழங்கப்பட்டது. அறிஞர் அண்ணா நகராட்சி பள்ளியில் தமிழக தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் மணிகண்டன், கலைவாணி மெட்ரிக்., பள்ளியில் அன்வர் ராஜா எம்.பி., பாளையங்கோட்டை மகராஜா நகர் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வெள்ளி விழா மேல்நிலைப் பள்ளியில் பாஜக., வேட்பாளர் நயினார் நாகேந்திரன், குருவாடி துவக்கப்பள்ளியில் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி, மணக்குடி தொடக்கப் பள்ளியில் அமமுக., வேட்பாளர் ந. ஆனந்த் வாக்களித்தனர்.
மாலை 5 மணி நிலவரப்படி, 183 அறந்தாங்கி தொகுதியில் 64. 19, % 208 திருச்சுழி தொகுதியில் 63.07/% பரமக்குடி தொகுதியில் 52.25% 210 திருவாடானை தொகுதியில் 59.85 % 211 ராமநாதபுரம் தொகுதியில் 61.66% 212 முதுகுளத்தூர் தொகுதியில் 52.56 சதவீத வாக்குகள் பதிவாகின.
இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 58.63%, பரமக்குடி சட்டமன்றத் தொகுதியில் சதவிதம் 52.25% வாக்குகள் பதிவாகின. பதற்றமானவை என கண்டறிப்பட்ட வாக்குச்சாவடிகளில் துணை ராணுவம், தமிழ்நாடு சிறப்பு போலீசார் கூடுதல் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர். ராமநாதபுரம் பசும்பொன் நகர் வாக்குச்சாவடிக்குள் போலீஸ் எஸ்.ஐ., மகாலட்சுமியின் அனுமதியை மீறி அமமுக., ஒன்றிய செயலர் முத்தீஸ்வரன் நுழைய முயன்றார். அங்கு ஏற்பட்ட வாக்கு வாதத்தால் சிறிது நேரம் பதற்றம் நிலவியது. டிஎஸ்பி., நடராஜன் தலைமையில் நடமாடும் போலீசார் குவிக்கப்பட்டு வாக்குப்பதிவு தொய்வின்றி தொடர்ந்தது. சக்கரக்கோட்டை, கொழும்பு ஆலிம், கிரஸன்ட் மெட்ரிக்., வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப் பள்ளி உள்பட 13 பதற்றமான வாக்குச்சாவடிகளில் போலீசார் அடிக்கடி ரோந்து சென்றதால் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்தது.
.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print















