களை இழந்த வேலூர் பாராளுமன்ற தொகுதி.. முதன் முறையாக வாக்களிக்காத இத்தொகுதி மக்கள்…

இந்திய வரலாற்றில் முதல் முறையாக வேலூர் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் வாக்களிக்க வில்லை. வேலூர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க கட்டு கட்டாக பணம் வைத்திருந்தை அறிந்த வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்தனர்.

இதன் அடிப்படையில் ஜனாதிபதி பரிந்துரையின் பேரில் வேலூர் பாராளுமன்ற தேர்தல் இன்று 19-ம் தேதி ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக பொது விடுமுறையும் ரத்து செய்ய்ப்பட்டது. இதில் ஆம்பூர், குடியாத்தம் சட்டமன்ற தேர்தல் மட்டும நடந்தது.

இதன் காரணமாக இந்திய அளவில் சுதந்திரம் அடைந்து முதன் முறையாக இந்த தொகுதி மக்கள் வாக்களிக்க வில்லை. இது காட்பாடியில் இருக்கும் திமுக சட்டமன்ற உறுப்பினர் மற்றும் திமுக பொருளானர் துரைமுருகனுக்கு மிகப்பெரிய பின்னடைவாகவே கருதப்படுகிறது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!