மக்கள் பாதை சார்பாக இராமநாதபுரம் மாவட்டத்தில் நேர்மை தேர்தல் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மற்றும் விழிப்புணர்வு பரப்புரைகள்..

இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக இராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து ஒன்றிய பகுதிகளிலும் நேர்மை தேர்தல் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மற்றும் விழிப்புணர்வு பரப்புரைகள் 14.04.19 & 15.04.19 அன்று மேற்கொள்ளப்பட்டது.

நமது வாக்கு விற்பனைக்கு அல்ல , எனது வாக்கை விற்க மாட்டேன், 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி அனைவரும் வாக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு பரப்புரை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இராமநாதபுரம் நகர் பகுதியில் இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை ஒருங்கிணைப்பாளர்கள் நூருல் அமின், சரவணக்குமார் மற்றும் இராமநாதபுரம் ஒன்றிய பொறுப்பாளர் தினேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். நயினார்கோவில் ஒன்றியத்தில் சிலம்பரசன் மற்றும் இளையராஜா ஆகியோர் விழிப்புணர்வு பரப்புரையை மேற்கொண்டனர்.

திருப்புல்லாணி ஒன்றியத்தில் கிளாட்வின் மற்றும் மாதவன் ஆகியோர் விழிப்புணர்வு பரப்புரையை மேற்கொண்டனர். இராஜசிங்கமங்கலம் ஒன்றியத்தில் ஆனந்த்ராஜ் மற்றும் நூருல் அமீன் ஆகியோர் விழிப்புணர்வு பரப்புரையை மேற்கொண்டனர். மண்டபம் ஒன்றிய பகுதிகளில் வீரக்குமார் மற்றும் அருளானந்து ஆகியோர் விழிப்புணர்வு பரப்புரையை மேற்கொண்டனர்.

திருவாடானை ஒன்றிய பகுதிகளில் சரவணன் மற்றும் வினோத் ஆகியோர் விழிப்புணர்வு பரப்புரையை மேற்கொண்டனர். பரமக்குடி ஒன்றிய பகுதிகளில் ஆசிரியர் சரவணன் விழிப்புணர்வு பரப்புரையை மேற்கொண்டார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!