இந்திய நாட்டின் பிரதமர் யார் என்பதை முடிவு செய்யும் நபராக டி.டி.வி.தினகரன் விளங்குவார் – தூத்துக்குடி மக்களவை தொகுதி அமமுக வேட்பாளர் புவனேஸ்வரன் பேட்டி..

தூத்துக்குடி  பாராளுமன்ற தொகுதியில் அமமுக சார்பில் புவனேஸ்வரன் போட்டியிடுகிறார்.

வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் அவர் இன்று விமான மூலம் தூத்துக்குடி வந்தார். விமான நிலையத்தில் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் சுந்தர் ராஜ் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஹென்றி தாமஸ் மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்தச் SDPI கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்  வரவேற்பு அளித்தனர். 3வது மைல் மேம்பாலம் அருகில் வைத்து மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் நகரில் உள்ள தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அமமுக பாராளுமன்ற தொகுதி வேட்பாளர்கள்  அறிமுக கூட்டம் தூத்துக்குடியில் இன்று  நடைபெற்றது, அங்கு செய்தியாளர்களை சந்தித்த வேட்பாளர் புவனேஸ்வரன் இந்திய நாட்டின் பிரதமர் யார் என்பதை முடிவு செய்யும் நபராக டி.டி.வி.தினகரன் விளங்குவார் – தூத்துக்குடி மக்களவை தொகுதி அமமுக வேட்பாளர் புவனேஸ்வரன் பேட்டி

இந்தியா முழுவதும் மாநில கட்சிகள் தான் மக்களிடத்தில் அதிக நம்பிக்கையை பெற்று உள்ளன. தமிழகத்தின் சட்டமன்ற இடைத் தேர்தல்களிலும் நாடாளுமன்றத் தேர்தல்களிலும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அமோக வெற்றி பெறும். ஸ்டெர்லைட் விஷயத்திலும், சோபியா விவகாரத்திலும் தூத்துக்குடி மக்கள் பெரும் அதிருப்தியை சந்தித்துள்ளனர். இந்த நிலையில் எதை வைத்துக்கொண்டு பாஜகவினர் இங்கு ஓட்டு கேட்க வருகிறார்கள் என்பது தெரியவில்லை.

ஸ்டாலின் எந்த நிலையில் இருக்கிறார் என்பது தெரியவில்லை. ஏனெனில் கடல் இல்லாத நகரத்தில் துறைமுகம் அமைக்கப்படும் எனவும், ஜப்பானில் நான் துணை முதல்வராக இருந்தபோது எனவும் உளறி கொட்டுகிறார். ஆகவே அவர் எல்லாம் தமிழ்நாட்டின்  முதல்வரானால்  தமிழ்நாடு பாழாகிடும்.

இந்திய நாட்டின் பிரதமர் யார் என்பதை முடிவு செய்யும் நபராக டி.டி.வி.தினகரன் விளங்குவார். தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் வேட்பாளராக சென்னையை சேர்ந்த தமிழிசை சவுந்தரராஜனும் கனிமொழியும் நிற்கிறார்கள். இவர்களை எளிதில் பார்க்க முடியாது. ஆனால் இந்த மண்ணின் மைந்தன் ஆகவே நான் மக்களுக்கு ஒரு சாதாரண மனிதனாக இருந்து சேவை செய்வேன்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் மட்டுமல்ல தமிழ்நாட்டில் மக்கள் எதிர்க்கும் எந்த திட்டத்திற்கும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அனுமதி தராது. சென்னை- தூத்துக்குடி இடையே தினசரி ரயில் சேவை இயக்க நடவடிக்கை எடுப்பேன். இதைத் தவிர வி.வி.டி. சிக்னல் அருகே மேம்பாலம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் சுந்தர்ராஜ் ,தெற்கு மாவட்ட செயலாளர் ஹென்றி தாமஸ் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த SDPl நிர்வாகிகள் ,மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!