தேனி மக்களுக்கு மோடி புகழாராம் ..

தேனி மக்கள் தைரியமானவர்கள் என மோடி புகழ்ந்துள்ளார். மேலும் அவர் பேசுகையில், நீங்கள் முடிவு செய்யுங்கள். எப்படி இவர்களை கையாளப்போகிறோம் என்று. நமது நாட்டின் பாதுகாப்பு என்று வரும் போது, நாம் எப்போதும் சமரசரம் செய்துகொள்வதில்லை.

காங்கிரஸும், நேர்மையின்மையும் நெருங்கிய நண்பர்கள். தலித் மக்களுக்கு எதிரான அநீதிகளுக்கு எல்லாம் காங்கிரஸ் நீதி வழங்குமா?. எம்.ஜி.ஆர் ஆட்சியை கலைத்தவர்கள் இந்த காங்கிரஸார். பல ஆண்டுகளாக இப்பகுதியில் ரயில் இணைப்பிற்காக போராடுகிறீர்கள் என்று எனக்கு தெரியும். விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு, அதுபோன்ற பல பணிகள் விரைவுபடுத்தப்படும். மதுரை − செட்டிகுளம் தேசிய நெடுஞ்சாலை பணிகள் விரைவுப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

எய்ம்ஸ் மருத்துவமனை மூலமாக இப்பகுதி மக்கள் பயனடைவார்கள். பல ஆண்டுகளாக போராடிக்கொண்டிருந்த விவசாயிகள், தங்களது விளைபொருள்களின் ஆதார விலையை ஒன்னரை மடங்கு அதிகரிக்க கோரிக்கை வைத்தார். அதனை தற்போது  அதிகரித்திருக்கிறோம்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!