வேலூர் தொகுதியில் போட்டியிடும் தனது கணவருக்காக, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார் துரைமுருகனின் மருமகள். கன்னட மக்கள் வசிக்கும் ஒரு பகுதியில், கன்னட மொழியில் வாக்கு சேகரித்து நெகிழச்செய்திருக்கிறார்.
வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில், தி.மு.க சார்பில் களமிறங்கியிருக்கும் மகன் கதிர்ஆனந்தின் வெற்றிக்காக,அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் பல்வேறு வியூகங்களை அமைத்திருக்கிறார். தொகுதி முழுவதும் அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து உருக்கமாக வாக்கு சேகரிக்கிறார்.துரைமுருகனின் மருமகள் சங்கீதாவும், கணவர் கதிர்ஆனந்துக்காக தீவிர பிரசாரம் செய்துவருகிறார். குடும்பமே பிரசார களத்தில் தெறிக்கவிடுகிறார்கள். துரைமுருகன் மருமகளின் அணுகுமுறை அசத்தலாக இருப்பதால், சாமான்ய மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது.
இந்த நிலையில், கன்னட மக்கள் அதிகமாக வசிக்கும் குடியாத்தம் போடிப்பேட்டை பகுதிக்குச் சென்ற சங்கீதா, கன்னட மொழியில் வாக்கு சேகரித்து அசத்தினார். கன்னட மக்களும் உற்சாகமடைந்தனர். வாக்கு சேரிக்கும் இடங்களில், குழந்தைகளை தூக்கிக் கொஞ்சி மகிழ்கிறார். ஏழை எளிய மக்களிடம் நலம் விசாரித்து சிரித்துப் பேசுகிறார். சங்கீதாவின் பிரசாரத்தை வாக்காளர்கள் வியந்துபார்க்கின்றனர். மாமனாருக்கு ஏற்ற மருமகள் என்று பொதுமக்களும் பாராட்டுகின்றனர்.


You must be logged in to post a comment.