தென்காசி தொகுதி அமமுக வேட்பாளர் சூறாவளி பிரச்சாரம்!

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகளின் பிரச்சாரங்கள் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

அந்த வகையில் தென்காசி பாராளுமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் திருமதி.S. பொன்னுத்தாய் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேலநீலிதநல்லூர் ஒன்றியத்தில் நடுவக்குறிச்சி, குலசேகரமங்கலம், சேர்ந்தமரம், சின்னக்கோவிலாங்குளம், குருக்கள்பட்டி, மேலநீலிதநல்லூர், மேல இலந்தைகுளம், பெரியகோவிலாங்குளம் உட்பட பல்வேறு ஊராட்சிகளில் பரிசுப் பெட்டகம் சின்னத்திற்கு இன்று(10.04.19) தீவிரமாக வாக்குசேகரித்தார்.

அப்போது அவருடன் இணைந்து அமமுக நிர்வாகிகள்,எஸ்.டி.பி.ஐகட்சியினர் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்களும் தீவிரமாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். வாக்குசேகரிப்பின் போது வேலைவாய்ப்பு, விவசாயிகளுக்கான திட்டங்கள், இளைஞர் மற்றும் பெண்களுக்கான பல நல திட்டங்கள் நிறைவேற்றப்படும் என வாக்குறுதியை முன்வைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அனைத்து அரசியல் கட்சிகளும் சங்கரன் கோவிலுக்குட்பட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!