பிஜேபிக்கு நாட்டில் இடம் இல்லை என்பதை மக்கள் தேர்தலில் உணர்த்த வேண்டும் – கனிமொழி பிரச்சாரம்…

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி ஓட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட தருவைக்குளம், வெள்ளப்பட்டி,மாப்பிள்ளையூரணி, தாளமுத்துநகர், சோட்டையன் தோப்பு, ஏ.பி.சி.கல்லூரி உள்ளிட்ட பகுதியில் வாக்கு சேகரித்தார். அப்பகுதியில் பெண்கள் ஆரத்தி எடுத்து சால்வை கொடுத்தும் வரவேற்றனர்.

பொதுமக்கள் கொடுத்த மனுக்களை பெற்றுக் கொண்ட பின்பு கனிமொழி பேசுகையில் மத்தியிலே நடைபெற்று கொண்டிருக்க கூடிய ஆட்சி விவசாயிகளை கண்டு கொள்ளவில்லை. ஸ்டெர்லைட், ஆலைக்கு எதிராக அமைதியான முறையில் போராடிய மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி 13 பேரை சுட்டுக்கொன்றனர். மீனவர்கள் பிரச்சனை, விவசாயிகள் பிரச்சனை, நீட் தேர்வு திணித்து மாணவர்களை கல்வியை பாதித்த இந்த மத்திய மாநில ஆட்சிக்களை வீட்டுக்கு அனுப்ப கூடிய நாள் நெருங்கி கொண்டிருக்கிறது. ஜி.எஸ்.டி. போன்ற நம் மக்களின்  பொருளாதாரத்தை நாசமாக கூடிய திட்டங்களைதான் இவர்கள் தந்து இருக்கிறார்கள். தமிழகத்திலே பிஜேபியின் அடிமைகள் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.

திமுக ஆட்சி அமைந்ததும் தூத்துக்குடியில் மீனவர்களுக்கு தூண்டில் வளைவு தரப்படும். குடிநீர் பிரச்சனை தீர்க்கப்படும். ஸ்டெர்லைட்  ஆலை நிச்சயம் மீண்டும் வராது அது உறுதி. வரக்க்கூடிட தேர்தலில் இனி இந்த நாட்டில் பிஜேபிக்குஇடம் இல்லை என்பதை மக்கள் உணர்த்த வேண்டும். என்று கூறினார். மறக்காமல் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் . 

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!