உசிலம்பட்டியில் அமமுக தேனி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் தங்கதமிழ்ச்செல்வன் பிரச்சாரம்…

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சேடபட்டி பகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக தேனி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் தங்கதமிழ்ச்செல்வன் தீவிரபிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் வாக்காளர்களுக்கு அமைச்சர் ஆர்பி உதயக்குமாரிடமிருந்து பணம் வருவதாகவும், அதற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் உடந்தையாக இருப்பதாகவும் அதிமுகவினர் பணத்தை மட்டும் வைத்து ஜெயிக்க நினைக்கிறார்கள், அவர்களுக்கு இந்த பாராளுமன்ற தேர்தலில் மக்கள் மிகப்பெரிய தோல்வியை காட்டுவார்கள் என திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும் தேர்தல் ஆனையத்திடம் முறையிடபோவதாகவும் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட செயலாளர் மகேந்திரன், சேடபட்டி ஒன்றிய செயலாளர் துரைதனராஜ் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!