மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஒன்றியத்தைச் சார்ந்தது ஆரியபட்டி கிராமம்.இக்கிராமத்தில் உள்ள காலணிப் பகுதியில் 100க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.இந்தக் காலணிப்பகுதியில் சாக்கடை வசதி தண்ணீர் வசதி எரிமேடை மயானம் பொதுச்சாவடி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி இப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனுக் கொடுத்தும் செய்து தரப்படவில்லை எனக் கூறப்;;;படுகின்றது.இது தொடர்பாக சாலை மறியல் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல கட்ட போராட்டங்களை நடத்தியும் பலனில்லை.இதனால் ஆத்திரமடைந்த மக்கள் நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்து ஆரியபட்டி கிராமம் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டியதால் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.தேர்தல் புறக்கணிப்பு என ஆரியபட்டி காலணிப்பகுதி மக்கள் அறிவித்துள்ள நிலையில் இதுவரை எந்த அரசியல் கட்சியினரும் இப்பகுதியில் ஓட்டு கேட்டு செல்லவில்லை.இதுவரை அதிகாரிகளும் மக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

You must be logged in to post a comment.