ராமநாதபுரம் தொகுதி மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டும் திமுக கூட்டணி வேட்பாளரான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி இரண்டாவது முறையாக ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார். இன்று காலை ராமேஸ்வரம் ராமநாதசவாமி திருக்கோவிலில் ராமநாதசாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்பாள் சன்னதிக்கு சென்று சாமி தரிசனம் செய்து பின்னர் ராமேஸ்வரத்தில் காரியாளத்தை திறந்து வைத்து தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். ராமேஸ்வரத்தில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டு நவாஸ்கனிக்கு ஆதரவாக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் இணைந்து ராமேஸ்வரம் நகர் பகுதி, கடற்கரை துறைமுக வீதி, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.






You must be logged in to post a comment.