இந்திய நாட்டை மதசாற்பட்ட,ஊழலுக்கு துணை போகாமல், மக்கள் நலனுக்காக, எதிர்கால இந்தியாவின் நலனுக்காக பாடுபடக்கூடிய பாரளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்யக்கூடிய ஜனநாயக வழி தேர்தல் நடைபெற ணஉள்ளது.
இந்த நிலையில் தற்போது தோல்வி பயத்தில்,முதுகெலும்பு இல்லாத சில கட்சியினர் ஜனநாயக உரிமையான உங்கள் வாக்குரிமையை விலை பேசும் முகமாக மேன்மை நிறைந்த உங்கள் வாக்கை விலை பேசி அற்ப பணத்தை பல்வேறு புரோக்கர்கள் மூலமாகவும்,தன் கட்சிக்காரர்கள் மூலமாகவும் கொடுப்பதாக அறிய முடிகிறது.
அன்பிற்குரிய வாக்காளப்பெருமக்களே! இந்த தேர்தல் என்பது நமது நாட்டின் ஐந்து வருட தலைவிதியை நிர்ணயம் செய்யக்குடியதாக, மக்களுக்காக அரசால் ஒதுக்கபடும் நிதிகளை முறையாக மக்கள் நலனுக்காக செலவு செய்ய கூடிய வேட்பாளர்களை தேர்வு செய்யும் தேர்தல் ஆகும்.
அற்ப பணத்தை கொடுத்து ஓட்டு வாங்க துடிக்கும் அரசியல் வாதிகள் தான் வெற்றி பெற்ற பின் தொகுதி நலனுக்காக ஒதுக்கப்படும் நிதிகளை கூற்றாக கொள்ளை அடிப்பார்கள் என்பதை கடந்த கால வரலாறுகள் நமக்கு உணர்த்தி இருப்பதை நாம் அறிவோம்.
அன்பிற்குரிய வாக்காளப்பெருமக்களே! உங்கள் ஜனநாயக உரிமையான ஓட்டுக்கு அற்ப பணம் வழங்கிய வேட்பாளர்களை இனம் கண்டு புறம் தள்ளுங்கள். உங்கள் ஜனநாயக உரிமையான வாக்குரிமையை உங்கள் தொகுதியில் நிற்கும் வேட்பாளர்களில் யார் சிறந்தவர் என்பதை தேர்வு செய்து வாக்களியுங்கள். நீங்கள் அளிக்கும் வாக்கு ஊழலுக்கு துணை போகாமல் தொகுதி நலனுக்காக பாடுபடும் ஒரு நல்ல பாரளுமன்ற உறுப்பினரை தேர்வு செய்யக்கூடிய வாக்காக அமையட்டும்.
ஆக்கம்:- M.U.V. முகைதீன் இப்ராகீம், செயலாளர், மக்கள் நல பாதுகாப்பு கழகம், கீழக்கரை-623517
You must be logged in to post a comment.