கல்வித் துறையில் புதிய முன்னேற்றமாக, கல்வி குழும பள்ளிகள் மற்றும் அகாடமிகா இன்டர்நேஷனல் ஸ்டடீஸ் (Academica International Studies, USA) இணைந்து அமெரிக்க இரட்டைய பட்ட திட்டத்தை (American Dual Diploma Program) அறிமுகப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் 14 மாநிலங்களில் 205 பள்ளிகள், 15 கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை பங்காளித்துவத்தில் கொண்டு செல்லும் அகாடமிகா, உலகளவில் 55 நாடுகளில் 50,000 மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்கி வருகிறது. இந்த புதிய திட்டத்தின் மூலம், இந்திய மாணவர்கள், இந்திய உயர்நிலை இரண்டாம் நிலை சான்றிதழுடன் (Higher Secondary Certificate) கூடுதலாக, அமெரிக்க பட்டத்தையும் (American Diploma) பெறலாம்.
ACADEMICA கல்வி திட்டத்தின் முக்கிய அம்சங்கள்: TOEFL, SAT, IELTS தேர்வுகளின்றி அமெரிக்க பல்கலைக்கழகங்களில் நேரடியாக சேரும் வாய்ப்பு. இந்த திட்டத்தில் மாணவர்களுக்கு 6 மாதங்கள் அமெரிக்காவில் நேரடியாக கல்வி பயில வாய்ப்பு உள்ளது. அகாடமிகாவின் வருடாந்திர கோடைகால முகாம்களில் (Summer Camp) பங்கேற்பதற்கான வாய்ப்பும் வழங்கப்படுகிறது. 100% உள் நுழைவு (Guaranteed Admission) உறுதிப்படுத்தப்படுகிறது.
மேலும், இந்த திட்டம் STEM (Science, Technology, Engineering, Mathematics) அடிப்படையிலான கல்வி, அமெரிக்க ஆசிரியர்களின் நேரடி பயிற்சி, மற்றும் செயல்முறை, திட்ட அடிப்படையிலான கற்றல் முறை ஆகியவற்றை கொண்டு மாணவர்களுக்கு உலகத் தரத்திலான கல்வியை வழங்குவதை உறுதி செய்கின்றதுஇந்த திட்டத்தில் சேரும் மாணவர்கள், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி தொடரும் வாய்ப்பைப் பெறலாம். கல்வி குழும பள்ளிகள், இந்தியாவில் அமெரிக்க தரத்திலான கல்வியை மிகக் குறைந்த செலவில் வழங்கும் அமெரிக்கன் இன்டர்காண்டினெண்டல் பள்ளியை நிறுவவுள்ளது. இப்பள்ளி, தனியார் மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமான சர்வதேச கல்வி வழங்கி, உலகத் தரத்திலான கல்வி வாய்ப்புகளை அனைவருக்கும் எளிதாகக் கிடைக்கச் செய்கின்றன. அமெரிக்க இரட்டைய பட்ட திட்ட அறிமுகவிழா கல்வி குழுமத்தின் தலைவர் டாக்டர் செந்தில்குமார் மற்றும் தாளாளர் குமரேஷ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக • மி. ஆண்ட்ரஸ் கலாவியா கொல்லாசோஸ் (Director of International Development – Academica) • மி. சுரேன் ராமசுப்பு (Director, Academica – India) ஆகியோர் கலந்து கொண்டனர்
இதில், உலகளாவிய கல்வி வாய்ப்புகள் மற்றும் ACADEMICA கல்வி திட்டங்கள் பற்றிய விரிவான தகவல்கள் எடுத்துரைக்கப்பட்டது
You must be logged in to post a comment.