இன்றைய நவீன உலகத்தில் “ஏட்டு சுரைக்காய் குழம்புக்கு ஆகாது” என்பது சொல் மொழி மட்டும்தான், ஆனால் நடைமுறை உலகில் கல்வியறிவு இல்லாதவருக்கு அனைத்துமே எட்டாக்கனி என்ற நிலையே உருவாகி வருகிறது. ஆனால் அதே சமயம் ஒரு சாமானிய மனிதன் உழைத்துக் கொண்டே தரமான கல்வி பயில வேண்டுமென்றால் அது ஒரு கானல் நீராகவே போய்விடுகிறது. ஆனால் அந்த நிலையை மாற்றி சாமானிய மனிதனும் உலகத்தரம் வாய்ந்த கல்வியை கீழக்கரை போன்ற நகரிலேயே அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாகி இருப்பதுதான் “SYNERGY INTERNATIONAL” கல்வி குழுமம். தமிழகத்தில் சென்னையை மையமாக கொண்டு இயங்கி வந்த இந்த நிறுவனம் கீழக்கரையில் கிளையை தொடங்க உள்ளது.
இந்நிறுவனத்தின் கிளை நிறுவனம் கீழக்கரையில் வரும் 31-12-2017 (சனிக்கிழமை) மாலை 04.00 மணியளவில் ஆரம்பம் செய்யப்பட உள்ளது. இந்நிறுவனத்தின் கிளை அலுவலகம் வள்ளல் சீதக்காதி சாலையில் ஆலிம் புலவர் ஃபவாஸ் ஆர்கேட் வளாகம் முதல் மாடியில் (பிட்சா பேக்கரி) திறக்கப்பட உள்ளது. இக்கல்வி நிறுவனம் தமிழகத்தில் உள்ள பல்கலைகழகங்கள், இந்தியாவில் ராஜஸ்தான் போன்ற பல் வேறு பல்கலைகழகங்கள் மற்றும் ரசியா, அர்மேனியா போன்ற வெளிநாட்டு பல்கலைகழகங்களுடன் உடன்பாடு செய்து பல துறைக்கான சிறப்பு பாடப்பிரிவுகள் கல்வி பயல்பவர்களுக்கு வழங்க உள்ளனர். மேலும் இந்நிறுவனம் மூலம் படிப்புகளை முடிப்பவர்களுக்கு வெளிநாட்டிலும் செல்லத்தக்க இந்திய அரசாங்க ஓப்புதல்களும் ( Attestation) வாங்கி தரப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். இந்நிறுவனம் மூலம் பட்டயப்படிப்பு, பட்டபடிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் அனைத்து உயர் கல்வி படிப்புகளும் வழங்கப்பட உள்ளது.
இந்நிறுவனத்தில் திறப்புவிழா வரவேற்புரையை வெஸ்ட் ஏசியா டிராவல் சிராஜுதீன் வழங்க உள்ளார். இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் S.N சுல்தான் கிளை அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றுகிறார். பின்னார் இணை நிறுவனர் முனைவர் ஹுசைன் பாஷா தலைமயுரையாற்றுகிறார். மேலும் இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக திரைப்பட கவிஞர் யுகபாரதி, அறிவுமதி, சென்னை காயிதே மில்லத் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் ஹாஜாகனி ஆகியோர்கள் கலந்து கொள்கிறார்கள். இறுதியாக நிகழ்ச்சியின் நன்றியுரையை இந்நிறுவனத்தின் மண்டல மேலாளர் முகம்மது ஆசிப் வழங்க உள்ளார்.
மேலும் இந்நிகழ்வின் முக்கிய பகுதியாக வெளிநாட்டில் வேலை பார்க்கும் மக்களின் நிலையை விவரிக்கும் “கடல் கடந்த பறவைகள்” ஆவணப்படம் மற்றும் சிறந்த பல குறும்படங்கள் திரையிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிகழ்ச்சி மற்றும் இந்நிறுவனம் பற்றிய மேல் விபரங்களுக்கு கீழே போஸ்டரில் உள்ள அலைபேசி எண்ணில் அழைத்து தெரிந்து கொள்ளலாம்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print













