ஏழை மாணவனுக்கு இஸ்லாமியா பள்ளி தாளாளர் உயர் கல்வி பயில உதவி ..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள பனையடியேந்தல்  கிராமத்தில் வசித்து வரும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்த ஏழை விவசாயி வேலு மற்றும் சண்முகவல்லி அவர்களின்   மகன் தினேஷ்குமார், உத்திரகோசை மங்கை  அரசு மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து 1081 மதிப்பெண் எடுத்து இன்ஜினியரிங் கட் ஆப் 194 ரேங் எடுத்து, சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் இடம் கிடைத்தும் கல்வி கட்டணம் செலுத்த வசதி இல்லாமல் தவிப்பதாக சென்ற வாரம் பத்திரிக்கை செய்தி வந்தது.
அதனை கண்ட இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா IPS அவர்கள் அச் செய்தியை தனக்கு தெரிந்த நபர்களுக்கு    வாட்ஸப்  தகவல் மூலம் பகிர்ந்தார் ,கீழக்கரை இஸ்லாமியா பள்ளிகளின் தாளாளருக்கும் இத்தகவல் பகிரப்பட்டது , இஸ்லாமியா பள்ளியின் தாளாளர் எம் எம் க முகைதீன் இப்ராகிம் உடனடியாக காவல் கண்காணிப்பாளரை தொடர்பு கொண்டு மாணவனின் படிப்பு செலவு முழுவதையும் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.
இதனை அடுத்து, மாணவன் தினேஸ்குமாரின் பெற்றோர்களை வரவழைத்து அந்த ஏழை பெற்றோரிடம் அவர் மகனின் இந்த வருட படிப்பு செலவுக்கான ருபாய் 40000/- க்கான காசோலை வழங்கப்பட்டது , மற்ற வருட கல்வி செலவையும் ஏற்றுக்கொள்வதாக சம்மதம் தெரிவித்தார் . தாளாளர் எம் எம் கே முகைதீன் இப்ராகிம், மாவட்ட கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா.IPS வெகுவாக பாராட்டினார். அப்போது உடன் துணை கண்காணிப்பாளர் திரு  கோகுல கிருஷ்ணன் IPS,  மாவட்ட கியூ பிரிவு காவல் அதிகாரி ராமநாதன் மற்றும் இராமநாதபுரம் கோல்டன் ரோட்டரி கிளப்பின் தலைவர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!