அதிமுகவில் இருந்தபோதே ஓபிஎஸ், தினகரன், செங்கோட்டையன் மூவரும் குழி பறித்ததால்தான் வெற்றிவாய்ப்பை இழந்தோம். இப்படிப்பட்ட துரோகிகளால்தான் 2021ல் எங்களால் ஆட்சிக்கு வரமுடியவில்லை. திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று ஓபிஎஸ் சில தினங்களுக்கு முன்பு கூறினார். உண்மையான அதிமுக தொண்டர் வாயில் இருந்து இப்படியொரு வார்த்தை வருமா? அவருடன் எப்படி சென்று மீண்டும் இணைய முடியும்? இவர்களெல்லாம் திமுகவின் B டீமாக செயல்படுகிறார்கள், என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

