முக்கிய மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்காக, சிறப்பு வாக்காளர் பட்டியல் பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் நியமித்து உள்ளது.
1. மேற்கு வங்காளம், தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், குஜராத், கேரளா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் நடைபெறும் சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) கண்காணிப்பதற்காக இந்திய தேர்தல் ஆணையம் சிறப்பு வாக்காளர் பட்டியல் பார்வையாளர்களை (SROs) நியமித்துள்ளது.
2. சிறப்பு வாக்காளர் பட்டியல் பார்வையாளர்கள் (SRO) ஏற்கனவே தங்கள் பணியை தொடங்கி விட்டனர். மேலும், பிப்ரவரி 2026-ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் வரை. இந்த மாநிலங்களில் வாரத்தில் இரண்டு நாட்கள் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
3. சிறப்பு வாக்காளர் பட்டியல் பார்வையாளர்கள் அனைத்து தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் மாநில மற்றும் மாவட்ட அளவிலான தலைமைகளுடன் கூட்டங்களை நடத்துவார்கள்.
4. முழு செயல்முறையும் சீராகவும், வெளிப்படையாகவும், பங்கேற்புடனும் நிறைவடைவதை உறுதிசெய்ய, சிறப்பு வாக்காளர் பட்டியல் பார்வையாளர்கள் மாநிலங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் (CEOs) மற்றும் மாவட்டத் தேர்தல் அதிகாரிகளுடன் (DEOs) நேரில் அல்லது இணையவழி கூட்டங்களில் பங்கேற்பார்கள்.
5. எந்த தகுதியுள்ள வாக்காளரும் விடுபடாமல் இருக்கவும் எந்தவொரு தகுதியற்ற நபரும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படாமல் இருக்கவும் சிறப்பு வாக்காளர் பட்டியல் பார்வையாளர்கள் சிறப்பு தீவிர திருத்த செயல்முறையை கண்காணிப்பார்கள். இவ்வாறு தேர்தல் ஆணைய செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


You must be logged in to post a comment.