திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா பகுதிகளில் கடந்த 16/11/18 அன்று வீசிய கஜா புயலின் தாக்கத்தால் சித்தையன் கோட்டையில் இருக்கும் கிளை அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிளில் 3 டிரான்ஸ்பார்மர்கள் பழுதடைந்ததோடு சுமார் 30 க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் ஒடிந்து இருளில் மூழ்கியது .
இதனை சீரமைக்கும் பணியில் வத்தலக்குண்டு மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பழனிச்சாமி ஆலோசனையின் அடிப்படையில் சித்தையன் கோட்டை அலுவலக (பொறுப்பு) உதவி மின்பொறியாளர் செல்லகாமாட்ஷி மேற்பார்வையில் வத்தலக்குண்டு மின்பனியாளர்கள் மற்றும் சித்தையன் கோட்டை பிரிவு. அலுவலர்கள் ஊழியர்கள் ஆகிய 30க்கும் மேற்பட்டவர்கள் இருளில் மூழ்கிய பகுதிகளை சீர்செய்து மின்சாரம் வழங்கி வருகிறார்கள் நேரத்திற்கு உணவையும், உறக்கத்தையும் மறந்து இரவு பகல் பாராமல் பொதுமக்கள் நலன் கருதி பனியாற்றிக் கொண்டிருக்கும் மின்வாரிய பனியாளர்களை பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
மாவட்ட செய்தியாளர்:-பக்ருதீன்


You must be logged in to post a comment.