இரண்டு மாத மின்சார கணக்கெடுப்பு கொண்டு மக்களை சுரண்டும் மின்சார வாரியம்..

தமிழகத்தில் பொதுவாக இரண்டு மாதம் ஒரு முறையே மின்சார கணக்கு எடுக்கப்படுகிறது.  ஆனால்  பெரும்பாலும் இந்த விஷயத்தில் யாரும் கவனம் எடுத்துக் கொள்வதில்லை. இதனால் நம்முடையப் பொருளாதாரம் திட்டமிட்டு மின்சார வாரியத்தால் சுரண்டப்படுகின்றது.

இது சம்பந்தமாக அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல கவி,தமிழ்செல்வன்,கன்ஷ்யூமர் ஆக்டிவிஷடு, மாநில துணை செயலாளர், தமிழ்நாடு நுகர்வோர் குழுக்களின் ஒருங்கிணைப்பாளர், இது சம்பந்தமாக பொதுமக்கள் விழிப்புணர்வோடு இருக்க வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்z

மின்சார வாரியம், இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மின்சார ரீடிங் எடுப்பதால் மிகப் பெரிய பொருளாதார நஷ்டம் நமக்கு ஏற்படுகின்றது. உதாரணத்திற்கு 500 யூனிட் வரை பயன்படுத்தியதற்கு கட்டணம் ரூ.1330. அதே நேரத்தில் ஒரு யூனிட் கூடுதலாக வந்தால் (501 யூனிட் ) அப்பொழுது கட்டணம் ரூ.2127.

ஒரே ஒரு யூனிட் கூடுவதால், நமக்கு ஏற்பட்ட கூடுதல் செலவு ரூ.797.யோசித்துப் பாருங்கள்…. நம்மை அரசு எவ்வாறு சுரண்டுகின்றது என்று…ஆக, ஒவ்வொரு மாதமும் மீட்டர் ரீடிங் செய்யப்பட்டால், நம்முடைய மின்சார கட்டணம் குறைவு. மேலும். இரண்டு மாதத்திற்கு ஒரு முறையாவது (60 நாட்களுக்கு ஒரு முறையாவது) மீட்டர் ரீடிங் பார்க்க சரியாக வருகின்றார்களா .? என்று சொன்னால் நிச்சயமாக இல்லை.

இரண்டு மாதத்திற்கு ஒரு முறை 28 அல்லது 29 ந் தேதி ரீடிங் பார்க்க வர வேண்டிய ஊழியர், இந்த மாதம் 31ந் தேதி வந்ததால் பல வீடுகளில், இந்த மாதம் மட்டும் மின் கட்டணம் ஆயிரக்கணக்கில் வந்துள்ளது. ஆகவே இந்த அநியாயத்திற்கெதிராக குரல் கொடுக்க வேண்டியது அனைவருடைய கடமையாகும்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

2 thoughts on “இரண்டு மாத மின்சார கணக்கெடுப்பு கொண்டு மக்களை சுரண்டும் மின்சார வாரியம்..

  1. Monthly Reading required, who will do this? Who will help people of Tamilnadu?.our Cm,pm,DMK,congress or who? Real leader Tamilnadu required.

  2. yes, this ….. electricity board people never work properly, they are all lazy people. someone should raise our voice , in kilakarai these eb board workers are too lazy fellows.

Comments are closed.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!