பன்முக கலாசாரம் கொண்ட தேசிய புண்ணிய ஸ்தலமான ராமேஸ்வரத்திற்கு தமிழகம் மற்றும் வட மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயனாளிகள் வந்து செல்கின்றனர். கடந்த இரண்டு மாதங்களாக ராமேஸ்வரம் நகரில் அடிக்கடி நிலவும் தொடர் மின்வெட்டால் சுற்றுலா பயணிகளிடம் இரவு நேர அச்சம் தொடர்கிறது.
மேலும் வியாபாரம் பாதிக்கப்பட்டு வருவதால் வியாபாரிகள், பொதுமக்கள் பல்வேறு அவதியடைந்து வருகின்றனர். அடிக்கடி தடைபடும் மின் விநியோகத்தை சீர் செய்வதில் தமிழக மின்வாரியம் எவ்வித முனைப்பு காட்டாமல் தொடர்ந்து மெத்தன போக்கு காட்டி வருகிறது அ.தி.மு.க.,அரசின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து இராமநாதபுரம் மாவட்ட திமுக பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில், மண்டபம் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் ஏ.சி.ஜீவானந்தம் முன்னிலையில் இராமேஸ்வரம் மின் வாரியம் அலுவலகம் முன் இராமேஸ்வரம் நகர் திமுக சார்பில் 13.7.2019 சனிக்கிழமை மாலை 4 மணி அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இதில் திமுக முன்னணி நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், பொதுமக்கள், வியாபாரிகள், இளைஞர்கள் கலந்துகொண்டு ஆதரவளிக்குமாறு இராமேஸ்வரம் நகர் திமுக செயலாளர் கே.இ.நாசர்கான் அழைப்பு விடுத்துள்ளார்.


You must be logged in to post a comment.