மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரியகுடியிருப்பு பகுதி பூ மார்க்கெட் அருகே பழுது ஏற்பட்டிருந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின் கம்பம் அமைக்கும் பணி
நடைபெற்று வந்தது.ஐந்துக்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது மின்கம்பம் அருகே உள்ள மரத்தில் இழுவைக்கு கயறுடன் சுவர் அருகே இருந்தபோது சுவர் முத்துக்குமார் மேல் இடிந்து விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த முத்துக்குமார் சிகிட்சைக்காக தனியார் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார்.அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.திடிரென விழுந்ததில் அவனியாபுரம் சந்தோஷ் நகர் பகுதியை சேர்ந்த சின்னராசு மகன் முத்துக்குமார்( வயது 46 ) மீது விழுந்து படுகாயம் அடைந்தார்.அவரை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிசில் இருந்த முத்துக்குமார் நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.மின்கம்பம் மோதி விபத்தில் பலியான முத்துக்குமாருக்கு சரண்யா தேவி (வயது 36 )என்ற மனைவியும் யுடிசன் (வயது 17).ஜோதி ஸ்ரீ (வயது 16) என்ற மகளும் உள்ளனர் .யுடிசன் 12 ஆம் வகுப்பும் , ஜோதி ஸ்ரீ பதினொன்றாம் வகுப்பு தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர்.மின்கம்பம் சரி செய்யும் பணியின் போது முத்துக்குமார் மேல் சுவர் இடிந்து விழுந்து மின் வாயரிய ஊழியர் உயிரிழந்த சம்பவம் வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.
செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









