கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாகவே ஆர்.எஸ் மங்கலத்தில் மின் கணக்கீட்டில் குளறுபடிகள் நடைபெற்று வருகிறது.மின்சாரம் பயன்படுத்தப்பட்டதை விட அதிக ரீடிங் எடுக்கப்பட்டு சாதாரண கட்டணத்தை விட பன்மடங்கு அதிக கட்டணம் செலுத்தும் நிலை உள்ளது.வழக்கமாக செலுத்தும் மின்கட்டணத்தை விட தற்பொழுது மின் கட்டணம் ரூபாய் 2000, 4000, 5000, 10000, 15000, 25000 என்று
பன்மடங்கு அதிகமாக செலுத்தும் நிலை உளள்ளது.கொரோனா காலங்களில் ஏழை ஏளிய மக்கள் முறையான வருமானம் இன்றி கஷ்டப்படும் சூழலில் மின்கட்டணச்சுமையினால் மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர்.பயனாளி இல்லாமல் பூட்டிக்கிடக்கும் வீடுகளுக்கும் கூட மின் கட்டணம் ரூபாய் 2000 வரை செலுத்தும் நிலை உள்ளது.இந்த பிரட்சிசனை தொடர்பாக உதவி மின் பொறியாளர் அவரகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில்நான் எங்களுடைய மேல் அதிகாரிகளிடம் சரியாக கணக்கீடு எடுக்காத பணியாளர் பற்றி முறையிட்டால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்று கூறுகிறார்.ஆனால் பிரட்சனையை சரிசெய்ய இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதுகுறித்து இராஜசிங்கமங்கலம் இளைஞர் மஸ்ஜித் சேவைக் குழு நிர்வாகிகள் கூறியதாவது, மின் கணக்கீட்டு முறையில் மேற்குறிப்பிட்ட பிரச்சனைகளை மின்சார வாரிய அலுவலர்கள் உடனடியாக சரி செய்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.


You must be logged in to post a comment.