மயிலாடுதுறை மாவட்டம்,திருக்கடையூர் அருகேயுள்ள டி.மணல்மேடு கிராமத்தில் திடீரென ஏற்பட்ட உயர் மின் அழுத்த கோளாறால் 10 க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் எல்.ஈ.டி டீவி
மற்றும் மின்சாதனப்பொருட்கள் பழுதடைந்துள்ளது.டி.மணல்மேடு-வளையசோழகன் பகுதியை இணைக்கும் சாலையோரம் கடந்த 2 தினங்களுக்கு முன்பு அவ்வழியே வந்த வாகனம் ஒன்று நிலைத்தடுமாறி 3 மின் கம்பங்களில் மோதி உடைந்தது .உடனடியாக மின்சார வாரிய அதிகாரிகள் கவனக்குறைவாக சீரமைத்து சில மணி நேரங்களிலேயே மீண்டும் மின்சார இணைப்பை கொடுத்தப்போது அப்பகுதியில் உள்ள 10 க்கும் மேற்பட்ட வீடுகளில் உள்ள மின் சாதனப்பொருட்கள் ஏராளமானவை பழுதடைந்ததாக கூறப்படுகிறது.இது குறித்து சமூக ஆர்வலர் காழியப்பநல்லூர் அருள்தாஸ் கூறிய போது விபத்து ஏற்படுத்திய சில மணி நேரங்களிலேயே அவசர அவசரமாக கவனக்குறைவாக மின்இணைப்பை சரி செய்து மின்சாரம் விநியோகம் செய்ததால் ஏழை மக்களின் மின்சாதனப்பொருட்கள் பழுதடைந்துள்ளது.ஏற்கனவே வாழ்வாதரம் இழந்து மக்கள் தவிக்கும் சூழலில் மின்சாதனப்பொருட்கள் பழுதடைந்து தேவையற்ற செலவு மின்சார வாரிய அதிகாரிகளால் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.இது சம்பந்தமாக உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டுமென்றும் கூறியுள்ளார்.
இரா.யோகுதாஸ், மயிலாடுதுறை.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









