கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சி.எஸ்.ஐ, தூய யோவான் ஆலய மக்கள் மேட்டுப்பாளையம் வீதிகள் வழியாக குருதோலைகளை கையில் ஏந்தி பவனி வந்தனர்
கிறிஸ்தவ மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பண்டிகை கடந்த மாதம் சாம்பல் புதன்கிழமை அன்று தொடங்கியது. தொடர்ந்து 7 வாரங்கள் கிறிஸ்தவ மக்கள் தவக்காலத்தை கடைபிடிக்கின்றனர் கிறிஸ்து உயிர்த்தெழுந்த பண்டிகைக்கு முந்தைய வாரம் குருத்தோலை ஞாயிறாக கடைபிடிக்கப்படுகிறது
இந்த நாளில், கிறிஸ்தவ மக்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தி பவனியாக சென்று தேவாலயங்களில் வழிபடுவது வழக்கம். ஜெருசேலம் நகரில் பவனியாக வந்த இயேசு கிறிஸ்துவை அங்கிருந்த மக்கள் குருத்தோலைகளுடன் வரவேற்று, “தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா” என்று முழங்கியதை பாடி மகிழ்ந்தனர் அவற்றை நினைவுகூறும் வகையில் இந்த குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்படுகிறது மேட்டுப்பாளையம் சி. எஸ். ஐ, தூய யோவான் ஆலயம் விசுவாசிகள் பவானியில் குருத்தோலைகளை கையில் ஏந்தியபடி மேட்டுப்பாளையம் முக்கிய வீதிகள் வழியாக ஓசன்னா கீதங்களை பாடி பவனி வந்தனர்
இந்த பவனி நிகழ்ச்சியில் தலைமை ஆயர் அருள் பால் மாட்டின், உதவி ஆயர் அருள், தீனதயாளு மற்றும் செயலாளர், பொருளாளர், கமிட்டி அங்கத்தினர் பங்கு பெற்றனர்
You must be logged in to post a comment.