இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹா அல்குத்புல் அகதாப் சுல்தான் செய்யது இப்ராஹீம் ஷஹீது ஒலியுல்லா பாதுஷா நாயகம் தர்ஹாவில் மத நல்லிணக்க 850ம் ஆண்டு சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக மவுலீது எனும் பூகழ்மாலை கடந்த மே 9 ல் தொடங்கி நாள்தோறும் இரவு 10 மணி வரை நடந்து வருகிறது. மே 18ம் தேதி மாலை 5:00 மணியளவில் அடிமரம் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று மே 19 மாலை 5:00 மணி அளவில் மேளதாளங்கள் முழங்க வாண வேடிக்கையுடன் ஏர்வாடி முஜாவிர் நல்ல இபுராஹீம் சந்தனக்கூடு தைக்காவில் இருந்து தர்ஹா வரை ஊர்வலமாக ஒட்டகம் முன்னே செல்ல 20குதிரைகள் பின்னோக்கிச் செல்ல ஜொலி ஜொலிப்புடன் ரத ஊர்வலம் தர்ஹாவை அடைந்து மூன்று முறை சுற்றி வலம் வந்தது. மாலை 6:30 மணியளவில் ஒட்டகம் மீது கொண்டு வரப்பட்ட கொடியினை பெற்று தர்ஹா ஹக்தார் நிர்வாகிகள் கொடியேற்றம் செய்தனர். மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழும் இவ்விழாவில் அனைத்து சமுதாய மக்களும் திரளாக பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை தர்ஹா ஹக்தார் பொதுமகா சபையினர் செய்திருந்தனர். வருகிற மே31 மாலை 4:00 மணிக்கு சந்தனக்கூடு திருவிழா ஆரம்பமாகி ஜுன் 1ம் தேதி அதிகாலை 4:30 மணியளவில் மக்பாராவில் புனித சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெறும் அதனைத் தொடர்ந்து ஜூன் 7 மாலை 5:00 மணிக்கு கொடியிறக்கம் செய்யப்படும் இரவு 7:00 மணிக்கு தப்ரூக் எனும் நேய் சோறு அன்னதானம் வழங்கப்படும். இந்நிகழ்வில் கீழக்கரை வட்டாட்சியர் பழனிக்குமார் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் தலைமையில் நானூறுக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









