உலக இயற்கை நிதியத்தின் சார்பில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் கடைசி சனிக்கிழமையன்று அனுசரிக்கப்படும் ‘பூமி நேரம்’ என்ற நிகழ்ச்சி நடை பெற்று வருகிறது. பூமியில் தட்பவெப்ப மாற்றத்தின் விளைவை மக்களுக்கு உணர்த்தும் வகையிலும், தட்பவெப்ப நிலை மாற்றத்தை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலும் அன்றைய தினம் ஒரு மணி நேரத்திற்கு விளக்குகள் அனைத்தும் அணைக்கப்படும். இந்த நிகழ்வின்போது உலகம் முழுவதும் உள்ள வர்த்தக நிறுவனங்கள், இல்லங்களில் அவசியம் இல்லாத விளக்குளை ஒரு மணி நேரத்திற்கு அணைக்க அழைப்பு விடப்படும்.

இதனால் மின் ஆற்றல் சேமிக்கப்படுவதுடன், ஒளிசார் மாசடைதலும் குறைய வழி வகுக்கும். இவ்வகையில் 10-வது பூமி நேரம் நேற்று (மார்ச் 25) அனுசரிக்கப்பட்டது. உலகம் முழுவதும் 172 நாடுகளில் உள்ள சுமார் 7000 நகரங்கள் இதில் பங்குபெற்றன. இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரையிலான ஒரு மணி நேரம் அத்தியாவசியமானதை தவிர்த்து மற்ற மின் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டன.


மலேசியா, துபாய் போன்ற நாடுகளிலும் பூமி தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. உலகப் புகழ் பெற்ற சிட்னி ஓரா ஹவுஸ், ரோம் நகரின் கொலீசியம், அன்டார்டிகாவின் ஸ்காட் நிலையம், ஹார்பர் பாலம், லூனா பார்க், சிட்னி டவர் ஐ உள்ளிட்ட முக்கியமான கட்டிடங்களில் மின் விளக்குகள் அணைக்கப்பட்டன. மக்கள் கூடும் முக்கிய பகுதிகளில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். சென்னையில் பெசன்ட் நகர் கடற்கரையில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்தியாவில் டெல்லி, மும்பை, கொல்கத்தா போன்ற பெரு நகரங்களிலும் பூமி நேரம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









