ராமநாதபுரம் மாவட்டம், ராஜசிங்கமங்கலம் வட்டம், ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்ட நீர்நிலைகளான அரசூரணி, சந்தூரணி மற்றும் புலவர் அப்பா தர்ஹா ஊரணிகள் ஆர்.எஸ்.மங்கலத்துக்கு உட்பட்ட பகுதிகளின் நிலத்தடி நீரை உயர்த்துவதற்கு முக்கிய பங்காற்றுகின்றன. மேலும் இவை பொதுமக்கள் குளிப்பதற்கு ஏதுவானதாகவும் உள்ளன.இந்த ஊரணிகளுக்கு நீர் வந்து செல்லும் வாய்க்கால்கள் பல இடங்களில் தடைபட்டும், சில இடங்களில் தூர்ந்து போயும், மேலும் சில இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டும் உள்ளது.இதனால் ஊரணிக்கு நீர் வரத்து தடைபடுகிறது. மழை காலங்களில் போதிய நீரை தேக்கி வைத்தால் மட்டுமே கோடைகாலத்தில் ஊரில் உள்ள கிணற்றுக்களில் உள்ள நீர்மட்டத்தை சரியான முறையில் பாதுகாக்க முடியும்.அவ்வாறாக நீர்நிலைகளை முறையாக பாதுகாக்கவில்லையானால் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பாக ஊர் முழுவதும் நிலத்தடி நீர் மிகவும் ஆழத்திற்கு சென்று, பல வீடுகளில் உள்ள கிணறுகள் நீர் வற்றி காணப்பட்டன.இது போன்ற அவலங்களில் இருந்து ஊர்மக்களை பாதுகாக்க நமது ஊரின் மிக முக்கிய நீர் ஆதாரங்களான அரசூரணி, சந்தூரணி மற்றும் புலவர் அப்பா தர்ஹா ஊரணிகளுக்கு நீர் வரக்கூடிய வாய்க்கால்களை முறையாக பராமரித்து, தூர்வாரி, ஆக்கிரமிப்புகளை அகற்றி வரும் மலைகாலங்களில் தங்கு தடையின்றி நீரை தேக்கிட நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You must be logged in to post a comment.