அமீரகத்தில் இடியுடன் கூடிய மழை பொழிய வாய்ப்பு…

துபாய்: மீண்டும் ஒரு சாரல் மழையோடு இந்த வாரம் துவங்கியதால் பயணிகள் போக்குவர்த்து நெரிசலில் மிதந்தார்கள்.

கடந்த இரவை தொடர்ந்து ஞாயிறு அதிகாலையிலும் இடியுடன் கூடிய பலமான காற்று வீசும் என்று தேசிய சீதோஷனம் மற்றும் அறிவியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

இன்று அதிகாலை பரவலாக மழை பொழிந்ததால் அமீரகத்தில் பல பகுதிகளின் நெடுஞ்சாலைகளில் அபுதாபியிலிருந்து அல்அய்ன் வரை மற்றும் துபாயிலிருந்து ராஸ்அல்கைமா வரையில் உள்ள பகுதிகளில் போக்குவரத்து தடங்கள் ஏற்பட்டுள்ளது.

அமீரகம் முழுவதும் ஞாயிறு அன்று சிறிய மேக மூட்டமாகவும், வெப்ப நிலை 23-26 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்றும் அடுத்த இரண்டு நாட்காளுக்கு அதிகமான மேக மூட்டத்துடன் கூடிய மிதமான மழை பொழிய வாய்ப்பு உள்ளதாகவும் தேசிய சீதோஷன மற்றும் அறிவியல் ஆய்வு மையம் அறிவிப்பு செய்துள்ளது.

வரும் வாரங்களில் குளிர் காலம் முடிவுக்கு வர இருப்பதால் மழைக்காக ஏங்குவோருக்கு மகிழ்ச்சியான செய்தியாக கருதப்படுகிறது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!