மின் கட்டணத்தை குறைக்க சூரிய ஒளியின் மூலம் மின்சாரத்தை உருவாக்க, அந்த நாட்டின் குடிமக்கள் தங்களுடைய தோட்டங்களில் பூக்கள் வடிவிலான சூரிய மின் கலத்தை அமைத்து கொள்ள முடியும் என்று துபாய் முனிசிபாலிட்டி அறித்துள்ளது. முதலாவது சூரிய மின் கலத்தை முனிஸிபாலிட்டியின் தலைமையகத்தின் முகப்பு புறத்தில் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் அமீரகம் முழுவதும் பொது பூங்காக்களிலும் பொறுத்தப்படும் என்று நகர் மேம்பாட்டு குழு உறுதியளித்தது.
துபாய் முனிஸிபாலிட்டியின் இயக்குனர் ஹுசைன் நாசர் லூத்தா கூறுகையில்: நாள் ஒன்றுக்கு 2.31 கிலோ வாட் பீக் (Kwp) மின் கலம் 17 (kWh) மின்சாரத்தை உருவாக்குகிறது அதன் மூலம் ஒரு வருடத்துக்கு 250,000 விளக்குகளுக்கு எடுக்கப்பட்ட மின்சாரம் போதுமானதாக இருக்கும்.
மேலும் அவர் கூறுகையில்: புதிய திட்டமானது பிரதானமான மற்ற ஸ்மார்ட் திட்டங்களின் துபாய் லேம்ப் (Dubai Lamp) திட்ட வரிசையில் துவங்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் துபாய் லேம்ப் (Dubai Lamp) திட்டத்தை துபாய் முனிஸிபாலிட்டி ஆறிமுகப்படுத்தி அனைத்து கட்டங்களிலும் LED விளக்குகளை பொறுத்த வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டது. நிலையான எரிசக்தியின் மீது நம்பிக்கையை அதிகப்படுத்துவதே முக்கிய நோக்கம் என்று கூறினார்.

உணர் கருவியின் மூலம் பூ வடிவிலான சோலார் கருவியை சூரிய கதிர்களுக்கு ஏற்றவாறு திசையை தானாவே மற்றிக்கொள்ளும் தொழில் நுட்பம் கொண்டதால் மொட்டை மாடியில் அமைக்கப்படும் பாரம்பரியமிக்க சோலார் பேனலை காட்டிலும் 23 சதவிகிதம் அதிக திறன் கொண்டது. 32 சதுர மீட்டர்களில் அமைக்கப்படும் சோலார் பேனல் தயாரிக்கும் மின்சார்த்தை 5 சதுர மீட்டர்களில் அமைக்கப்படும் பூ வடிவிலான அதிநவீன சோலார் சாதனம் தயாரிக்கும் என்றும் தெரிவித்தார். பூ வடிவிலான சாதனத்தின் விலை 18000 டாலர் என்று சொஹல் ரினிவபில் எனர்ஜியின் மேலாளர் அலி கர்காஸ் குறிப்பிட்டிருந்தார்.
வீடுகளுக்கு தேவையான மின்சாரத்தை சோலார் பேனல்கள் மூலம் மின் உற்பத்தி செய்வதனால் மின் செலவுகளை குறைக்க முடியும் என்று எதிபார்க்கப்படுகிறது. எதிர்காலத்தில் வைஃபை இணைப்பு மற்றும் ஸ்மார்ட் அலைபேசிகளுக்கு சார்ஜ் செய்யவும் சோலார் பேனல்களில் வசதிகள் இணைக்கபப்டும் என்று தெரிவிக்கப்பட்டது. சூரிய ஒளிக்கு ஏற்றவாறு சாதனத்தின் இதழ்கள் திசையை மாற்றி கொள்ளும் திறன் வாய்ந்தது.
காற்று பலமாக வீசும் போது இறக்கைகளை சுருக்கி கொள்ள சென்சார்களும் பொருத்தப்பட்டுள்ளதாக கர்காஸ் தெரிவித்துள்ளார். நகருக்கு அழகு சேர்க்கும் வகையில் பூ மற்றும் பேரீச்ச மர வடிவிலான சோலார் பேனல்களை பொது பூங்காக்களிலும் கடற்கரைகளிலும் அமைக்க துபாய் முனிசிபாலிட்டி அதிக கவனம் செலுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









