“என்ன வளம் இல்லை” என் திருநாட்டில் என்று பாடிய இந்திய நாட்டில் அனைத்து வளமும் அந்நிய நாட்டுக்கு தாரை வார்க்கப்பட்டு வருகிறது. ஆனால் “எண்ணெய்” வளத்தை மட்டும் நம்பி உருவாகிய அமீரகத்தில் உள்ள துபாய், இன்று “என்ன” வளம் எங்களிடம் இல்லை என கேட்கும் அளவுக்கு, உலகையே தன் பக்கம் ஈர்க்கும் அளவுக்கு தொழில் துறை முதல் சுற்றுலா துறை உலகில் முதல் இடத்தை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் இப்பொழுது சேர்ந்திருப்பதுதான் “DUBAI SAFARI PARK”, செயற்கையான நிலத்தில் இயற்கை நயத்துடன் உருவாகி இருக்கும் விலங்கியல் பூங்கா.
சுற்றுலாவிற்காக உலகின் பல் வேறு பகுதிகளுக்கு செல்ல வேண்டியதில்லை என்று சொல்லும் அளவுக்கு அனைத்து பொழுது அம்சங்களும் நிறைந்த துபாய் “குளோபல் வில்லேஜ்” (GLOBAL VILLAGE) என்று சொன்னால் அது மிகையாகாது. அதன் வரிசையில் புதிய வரவாக துபாய் “சஃபாரி பார்க்” (Safari Park) என்ற பெயரில் விலங்கியல் பூங்கா பொது மக்களுக்காகவும், சுற்றுலா பயணிகளுக்காகவும் கடந்த வருடம் டிசம்பர் 12 அன்று திறப்பட்டது.
இப்பூங்கா 110 ஹெக்டரில் செயற்கையான முறையில் உருவாக்கப்பட்டுள்ள விலங்கியல் பூங்காவாகும். அரேபியன் வில்லேஜ் (Arabian Village), ஆப்பிரிக்க வில்லேஜ் (African Village), ஆசிய வில்லேஜ் (Asian Village), அல் வாதி (Al Wadi), சஃபாரி வில்லேஜ் (Safari Village) என்று ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அனைத்தையும் சுற்றிப் பார்க்க குறைந்த பட்சம் 8 மணி நேரம் தேவைப்படும் என்று கருதப்படுகிறது.
இந்த பூங்காவில் சஃபாரி வில்லேஜ் நுழைவு வாயில் வழியாக சென்றால் வாகனத்தில் பயணம் செய்து கொண்டே விலங்குகளை மிக அருகாமையில் பார்க்க முடியும் என்பது சிறப்பு அம்சமாக உள்ளது.
இந்த பூங்காவின் நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு 50 திர்ஹமும், சிறியவர்களுக்கு 20 திர்ஹமும் வசூலிக்கப்படுகிறது. தற்போது இணைய தளம் வாயிலாகவும் நிழைவுச் சீட்டை பெற வசிதிகளும் செய்யப்பட்டுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர் வரை குடும்பத்தோடு அனைவரும் செல்ல வேண்டிய பொழுது போக்கு விலங்கியல் பூங்காவாக இது உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print














Super we r going tomorrow we r planning to go…
Tnx for ur information