ஐக்கிய அரபு அமீரகம் 2019ம் வருடத்தை சகிப்புத்தன்மை வருடம் – Year of Tolerance என அறிவித்து, அந்நாட்டு மக்களின் சந்தோசத்திற்காக பல் வேறு காரியங்களை முன்னெடுத்து செல்கிறது. அதன் ஒரு பகுதியாக வாகன அபராதம் உள்ளவர்களுக்கு பல் வேறு சலுகைகளை விபத்துக்களை குறைக்கும் நோக்கத்தோடு அறிவித்துள்ளது.
அதாவது அமீரகத்தில் துபாய் மாநிலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நீங்கள் துபாய் காவல்துறையின் வாகன அபராத கட்டணம் உள்ளவர்களுக்கு நூறு சதவீதம் கட்டணம் தள்ளுபடி.
ஆம் நீங்கள் பிப்ரவரி 2019 இல் இருந்து ஒரு வருடத்திற்கு வேறு எந்த அபராதமும் பெறாமல் இருந்தால் முந்தைய கட்டணங்கள் முழுவதும் தள்ளுபடி செய்யப்படுமாம்.
அதுமட்டுமின்றி வேற சலுகைகளையும் அறிவித்துள்ளது துபாய் காவல்துறை. அதன்படி
3 மாதத்திற்கு 25% தள்ளுபடி 6 மாதத்திற்கு 50% தள்ளுபடி 9 மாதத்திற்கு 75% தள்ளுபடி
இது துபாய் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது, இது மற்ற அமீரகங்களுக்கு பொருந்துமா என்பதை விசாரித்து கொள்வது அவசியம்.
Source:- Khaleej Times, UAE

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print












