ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் ஸ்மார்ட் பார்க்கிங் (SMART PARKING) மீட்டர்களை சாலை மற்றும் போக்குவரத்து துறை அறிமுகப்படுத்தி உள்ளது. பொதுவாக சாலையோரங்களின் வாகனம் நிறுத்துவதற்கு தேவையான தொகையை செலுத்தி ரசீது பெற்று வாகனம் நிறுத்தும் போது வாகனத்தின் முகப்புறத்தில் வைக்க வேண்டும் என்பது அவசியமான ஒன்றாகும்.
ஆனால் தற்போது சோதனைக்காக ஒரு சில பகுதிகளில் மட்டும் ஸ்மார்ட் பார்க்கிங் மீட்டர்கள் பொறுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய வகையான பார்க்கிங் மீட்டர்களில் வாகனத்தின் எண்களை எளிதில் பதிவு செய்யும் வகையில் தொடுத்திரை (Touch Screen) தொழில் நுட்பம் அடங்கியுள்ளது.

அதன் மூலம் பணம் செலுத்தி வாகனத்தின் எண்களை பதிவு செய்து ரசீது பெற்றுக் கொண்டால் போதுமானது, அதனை வாகனத்தில் வைக்க வேண்டிய அவசியமில்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.
இது போன்ற புது வகையான சேவையின் மூலம் பார்க்கிங் மீட்டர்கள் இருக்கும் இடத்திலிருந்து வாகன நிறுத்துமிடத்திற்கு வர வேண்டிய நேரம் சேமிக்கப்படுகிறது. மேலும் இந்த டிக்கட்கள் மற்ற வாகனங்களுக்கு பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print










