ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் அல் பர்சா பகுதியில் அமைந்துள்ள தனியார் மஹாலில் துபாய் தமிழ் மன்றம் சார்பில் “Business Excellence” விருது நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமீரகத்தை சேர்ந்த இந்திய தொழிலதிபர்கள் , இந்தியாவில் உள்ள தொழிலதிபர்கள் மற்றும் தொழிமுனைவோர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது அதனைத் தொடர்ந்து 2024 ம் ஆண்டிற்கான விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விருது வழங்கும் விழாவில் 50 வருடத்திற்கு மேல் தொழில்துறையிலும் சமூக சேவைகளிலும் சிறப்பாக பணியாற்றிய அமீரகத்தில் வசிக்கும் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சார்ந்த தொழிலதிபரும் பிஎஸ்எம் குழும நிறுவனம் மற்றும் அரேபியா ஹோல்டரிங்ஸ் நிறுவனத்தின் நிறுவனருமான பி எஸ் எம் ஹபிபுல்லாவிற்கு தொழித்துறை மற்றும் சமூக சேவைக்காக வாழ்நாள் சாதனையாளர் விருது அமீரகத்தை சேர்ந்த அல் அலி குழும நிறுவனங்களின் நிறுவனர் யாகூப் அலி வழங்கி கௌரவித்தார். மேலும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பல ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு வழங்கி தனியார் வாடகை கார் (கார்ஸ் டாக்ஸி மற்றும் அரேபியா டாக்ஸி ) நிறுவனத்தை தொடங்கி சர்வதேச அளவில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவராவார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் இந்திய தொழிலதிபர் ராணா குழும நிறுவனத்தின் நிறுவனர் உட்பட பல்வேறு தொழில்முனைவோர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

You must be logged in to post a comment.