கீழக்கரை DSP மஹேஸ்வரி விருதுநகருக்கு பணியிட மாற்றம்

கீழக்கரை நகரில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் காவல் துறை துணை கண்காணிப்பாளராக சிறப்பாக பணியாற்றி வந்த DSP மஹேஸ்வரி தற்போது விருதுநகருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கீழக்கரை நகருக்கு புதிய துணை கண்காணிப்பாளராக DSP பாலாஜி பொறுப்பேற்க உள்ளார். கீழக்கரை நகரில் கடந்த மூன்று ஆண்டுகளில் சட்டம் ஒழுங்கு மற்றும் பல்வேறு வழக்குகளை திறம்பட கையாண்டு சாதனைகளை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு நேர்மையான காவல் துறை அதிகாரியை கீழக்கரை நகர் இழக்கிறது என்றே கூற முடிகிறது. கீழக்கரை நகர் மக்கள் கனத்த இதயத்துடன் வழியனுப்பி வைக்கிறோம்.

எங்கு பணியில் இருந்தாலும் இறைவன் அருளால் நேர்மையின் உறுதியோடு பல்வேறு சாதனைகள் புரிந்து, வெற்றி மங்கையாய், சாதனை பெண்மணியாய் எப்போதும் மிளிர்ந்து நம் மக்களுக்கும், தேசத்திற்கும் உழைக்க வேண்டுமென கீழை நியூஸ் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!