நேர்மை மிக்க காவல் துறை டி.எஸ்.பி குப்புசாமி ஏ.எஸ்.பியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இன்ஸ்பெக்டர், உளவுப் பிரிவு டி.எஸ்.பி, மின்வாரிய குற்றங்கள் தடுப்பு, என பல்வேறு பதவிகள் மற்றும் பணிகளில் சிறப்பாக பணியாற்றியவர் குப்புசாமி. மதுரை டி.எஸ்.பியாக உள்ள குப்புசாமிக்கு தீவிரவாத தடுப்பு ஏ.எஸ்.பி பதவியை தமிழக அரசு வழங்கியுள்ளது. கன்னியாகுமரி முதல் திண்டுக்கல் வரை உள்ள அனைத்து மாவட்டங்கள், நகரங்கள், முக்கிய பகுதிகள் அனைத்தும் இவரது நேரடி கண்காணிப்பில் வரும். தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் இவரது சேவை இருக்கும். ஏ.எஸ்.பி வி.குப்புசாமி திருநெல்வேலி- தூத்துக்குடி நெடுஞ்சாலையில் உள்ள முறப்பநாடு விட்டிலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர். தற்போது கீழப்பாவூரில் வசித்து வருகிறார். நேர்மை, ஒழுக்கம் இவரது அடையாளம். காவல்துறை தலைவர் வால்டர் தேவாரத்துடன் நெருக்கமானவர். பதவி உயர்வு பெற்றுள்ள ஏ.எஸ்.பி குப்புசாமிக்கு சமூக நல ஆர்வலர்கள், பொதுமக்கள், காவல் துறையினர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

You must be logged in to post a comment.