ராமநாதபுரத்தை அடுத்த கீழக்கரையில் மெத்தப்பட்டமைன் போதைப்பொருள் கடத்தப்படுவதாக க்யூப் பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், குற்றவாளிகள் தப்பி விடாத வண்ணம் கீழக்கரை போலீசாருக்கு பிரிவு போலீசார் அளித்த தகவலின் அடிப்படையில் கீழக்கரை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனையிட்டபோது, சந்தேகத்திற்கு இடமான வகையில் முன்னுக்குப் பின் முரணான பதில் அளித்த நபர்கள் சென்ற காரில் தீவிர சோதனை செய்தபோது, காரில் நான்கு கிராம் உயர்ரக போதை பொருளான மெத்தப்பட்டமைன் இருந்ததை கண்டறிந்து பறிமுதல் செய்த போலீசார், காரில் இருந்த கீழக்கரை ஈசா தண்டையார் தெரு பகுதியைச் சேர்ந்த ஜெயினுல் ஆபுதீன், கீழக்கரை நடுத்தெரு பகுதியைச் சேர்ந்த சதாம் உசேன், கீழக்கரை கீழத்தெரு பகுதியைச் சேர்ந்த சையது முகமது ஆகிய மூவரை கைது செய்து கீழக்கரை போலீசார் வழக்குப்பதிந்து சிறையில் அடைத்தனர்.
You must be logged in to post a comment.