இராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக நடைபெறும் கடத்தல்கள் குறித்து தீவிர நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி. சந்தீஷ் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் 11.07.2025-ம் தேதி அன்று சட்டவிரோத போதைப்பொருள் தடுப்பு தொடர்பாக கீழக்கரை சார்பு ஆய்வாளர் தலைமையில் குழு ரோந்து மேற்கொண்டபோது கீழக்கரை தாசிம்பீவி மகளிர் கல்லூரி அருகே சங்குளிகார தெருவை சார்ந்த செய்யது கருணை மகன் முகைதீன் ராசிக் அலி என்பவர் சந்தேகிக்கும்படி நின்று கொண்டிருந்த அவரை சோதனை செய்தபோது அவரிடமிருந்து சுமார் 2.5 கிராம் அளவுள்ள மெத்தம்பெட்டமைன் கைப்பற்றப்பட்டது.
மேலும் விசாரணையில் மெத்தம்பெட்டமைன் பொருளை என்.எம்.டி தெருவை சார்ந்த சீனி முகமது அப்துல் காதர் என்பவரின் மகன் ஆக்கில் அலி என்பவரிடமிருந்து வாங்கப்பட்டதாக தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து கீழக்கரை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து முகைதீன் ராசிக் அலி நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.
போதைப்பொருளை கைப்பற்றி சிறப்பாக செயல்பட்ட தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர் கீழக்கரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மற்றும் அவரது குழுவினரை காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார்.
மேலும் இராமநாதபுரம் மாவட்டத்தில் இதுபோன்று சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி. சந்தீஷ், எச்சரித்துள்ளார்
You must be logged in to post a comment.