விவசாயிகள் ‘வறட்சி நிவாரணம்’ பெற வங்கி கணக்கு விவரங்களை ‘வி.ஏ.ஓ’ விடம் சமர்ப்பிக்க நாளை கடைசி நாள் – ஆட்சியர் அறிவிப்பு

தமிழகத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு பருவ மழை பொய்த்து விட்டதால் அனைத்து மாவட்டங்களும் வறட்சி பாதித்தவையாக அறிவிக்கப்பட்டு விட்டன. இந்நிலையில் நிவாரண தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்துவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் நம் இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்னும் பல விவசாய பெருமக்கள் தங்கள் வங்கி கணக்கு உள்ளிட்ட விபரங்களை தராமல் உள்ளனர். தற்போது இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

அதில் விவசாயிகள் தங்களுடைய வங்கி கணக்கு எண், ஆதார் எண் உள்ளிட்ட தகுந்த ஆவணங்களை வி.ஏ.ஓ விடம் சமர்ப்பிக்க நாளை கடைசி நாள் என்று அறிவித்துள்ளார். ஆகவே நம் பகுதி விவசாய பெருமக்கள் உடனடியாக நாளை 26.02.17 உங்களின் ஆவணங்களை முறையாக சமர்ப்பித்து வறட்சி நிவாரணத்தை பெற வேண்டுமாய் கீழை நியூஸ் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!