கீழக்கரையில் ஊரடங்கு சமயத்தில் அவசியமின்றி நடமாடும் நபர்கள் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு….

தற்சமயம் கொரோனாவின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு பல்வேறு கட்டுபாடுகளை விதித்து வரும் நிலையில் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் ஊரடங்கை முன்னிட்டு தேவையில்லாமல் சுற்றுபவர்களை கண்காணிக்க கீழக்கரை அனைத்து ஜமாத் கூட்டமைப்பு சார்பில் கீழக்கரை நகராட்சியில் பொறுப்பு ஆணையாளர் பூபதி, கீழக்கரை காவல் ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் அனைத்து ஜமாத் கூட்டமைப்பின் செயலாளர் ஷேக் உசேன், மூர் அசனுதீன்,நவாஸ் ஆகியோர் தலைமையில் ட்ரோன் கேமரா இயக்கப்பட்டு வெளியில் நடமாடுபவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

மேலும் அவர்கள் மீது அபராதமும், வழக்குப்பதிவு செய்யப்படும் எனவும் இந்த கண்காணிப்பு தொடர்ந்து செயல்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர். அதே சமயம் கீழக்கரை போன்ற ஊர்களில் பெண்கள் மொட்டை மாடிகளில் பல் வேறு வேலைகளை செய்து வரும் நிலையில் இந்த ட்ரோன் கண்காணிப்பு எதிர்மறை விமர்சனங்களையும் கிளப்பியுள்ளது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!