கீழக்கரையில் பள்ளி நேரங்களும், குடி தண்ணீர் வினியோக லாரிகளும்…

கீழக்கரையின் தண்ணீர் தேவையை அதிக அளவில் நிறைவேற்றுவது வெளியூரில் இருந்து வரும் குடி தண்ணீர் லாரிகள் மூலமாகத்தான். ஒரு நாள் தண்ணீர் லாரி வரவில்லை என்றாலும் கீழக்கரை மக்களின் பாடு திண்டாட்டம் ஆகி விடுகிறது. ஆனால் அதே சமயம் தண்ணீர் லாரிகள் காலை மற்றும் மதிய வேலைகளில் பள்ளிக்ககூடங்கள் ஆரம்பம் ஆகும் நேரம் மற்றும் பள்ளி முடிந்து குழந்தைகள் வரும் நேரம் முக்கிய வீதிகளில் வந்து விடுவதால் அநேக நேரங்களில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விடுகிறது.

இது சம்பந்தமாக கீழக்கரை நகராட்சி அதிகாரிகள் கீழக்கரை தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் உரிமையாளர்களை அழைத்து, நகரங்களில் நடைமுறையில் இருப்பது போல் மாணவ, மாணவிகளின் பள்ளி நேரங்களில் இடையூறு இல்லாத அளவுக்கு குடிநீர் லாரிகள் ஊருக்குள் வருவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இது போன்ற நடவடிக்கை எடுப்பது மூலம் குடிநீர் லாரி உரிமையாளர்களுக்கும், பொது மக்களுக்கும் நிம்மதி கிடைக்கும். நகராட்சி நிர்வாகம் இது சம்பந்தமாக நல்ல தீர்வு காணும் என சமூக ஆர்வலர்களும் அம்மா அழைப்பு மையத்தில் பதிந்து வைத்து காத்திருக்கிறார்கள்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!