நம் நாடு இன்று 71வது சுதந்திர தினத்தை சிறப்பாக நாடு முழுவதும் தேசியக் கொடி ஏற்றி விடுதலை போராட்டத்தில் வீர மரணம் அடைந்தவர்களை நினைவுகூறும் வண்ணம் கொண்டாடப்பட்டு வருகிறது.
பாரதப் பிரதமரும் தன்னுடைய சுதந்திர தின உரையில் நம் நாடு அனைத்து தடைகளையும் உடைத்து சுத்தமான, சுகாதாரமான இந்தியாவை நோக்கி செல்கிறது என்று பேசியது மிகவும் பெருமையாக உள்ளது.

ஆனால் கீழக்கரை போன்ற தாலுகா அந்தஸ்தில் உள்ள ஊரில் மக்களுக்கு சுகாதாரத்தை சீர் குலைக்கும் சாக்கடை பிரச்சினைக்கு எத்தனை அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் வந்தாலும் நிரந்தர தீர்வு காண முடியாத நிலையிலேயே உள்ளது.
இரண்டு தினங்களுக்கு முன்பு கீழக்கரையில் கடுமையான மழை பெய்து ஓய்ந்தது. இதனால் ஏற்பட்ட சாக்கடை பெருக்கை சரி செய்வதற்கு கீழக்கரையில் உள்ள சமூக அமைப்புகள், ஆர்வலர்கள், ஊடகங்கள் என்று பல முனையில் வேண்டுகோள்கள் விடுத்தும் பணிகள் மந்தமாகவே நடைபெறுகிறது.

பள்ளிகள், கல்லூரிகள் சுதந்திர தின விழாவுக்காக தயாராகிக் கொண்டிருந்த வேலையில் நேற்று (14/08/2017) வரை பள்ளிக்கு செல்லும் சாலைகளில் சாக்கடை ஓடிய வண்ணம்தான் இருந்தது. அதே போல் தெற்கு தெருவில் பள்ளிகள் மற்றும் தொழுகை பள்ளிகளுக்கு செல்லும் முக்கிய சாலைகளில் உள்ள வாறுகால் மூடிகள் உடைந்து அபாயகரமாக இருக்கும் நிலையை சுட்டிக்காட்டி இருந்தோம், நகராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், இறுதியில் அப்பகுதியில் உள்ள பள்ள நிர்வாகமே மாணவர்களின் பாதுகாப்பு கருதி தற்காலிகமாக கற்களை வைத்து மூடியுள்ளார்கள்.

அதே போல் மாஸ் கிளினீங் ( Mass Cleaning) என்ற பெயரில் ஆரம்பித்த துப்பரவு பணிகளே இப்பொழுது புதிய குப்பை மேடுகள் உருவாக காரணம் ஆகிவிட்டது. முதல் நாள் சேகரித்த குப்பைகளை உடனே எடுக்காமல், ஓரிடத்தில் சேர்த்து வைத்து விட்டு அடுத்த நாளே சுத்தம் செய்கிறார்கள். ஆகையால் அடுத்த நாள் குப்பைகளை நகராட்சி எடுக்கும் வரை, பொதுமக்களும் அவ்விடத்தில் குப்பையை கொட்ட தொடங்குவதால், கூடுதல் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. கீழே காண்பது முஸ்லிம் பஜாரில் நகராட்சியால் சேமித்து வைத்திருந்த குப்பை..

என்று விடிவுகாலம் பிறக்கும் இந்த சாக்கடை பிரச்சினைக்கு?? சென்றவர்களுக்கும் தெரியவில்லை.. இனி வரக்கூடியவர்களாவது செய்வார்களா? என்பது ஆச்சர்ய குறியாகவே உள்ளது.


Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









